உங்கள் கருத்து
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (6)
- அம்மன் கோவில் (205)
- அரங்க நிகழ்வுகள் (17)
- அறிவித்தல் (35)
- அறிவியல் (63)
- ஆன்மீகம் (21)
- ஆறுமுக வித்தியாலயம் (85)
- இடுமன் கோவில் (86)
- இத்தாலி (28)
- ஊருக்கு உதவுவோம் (19)
- ஊர் காட்சிகள் (31)
- ஐரோப்பிய செய்திகள் (78)
- கனடா (56)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)
- கருத்துக்களம் (43)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (16)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)
- கோவில்கள் (267)
- சங்கர் (15)
- சமைத்துப் பார் (492)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)
- சாந்தை காளிகோவில் (18)
- சாந்தை சனசமூக நிலையம் (31)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)
- சாந்தை பிள்ளையார் கோவில் (103)
- சிந்திப்பவன் (19)
- சுவிஸ் (68)
- சுவீடன் (13)
- செய்திகள் (23,782)
- ஜேர்மனி (71)
- டென்மார்க் (41)
- தினம் ஒரு திருக்குறள் (81)
- திருமணவிழா (43)
- நற்சிந்தனைகள் (18)
- நினைவஞ்சலி (189)
- நெதர்லாந்து (23)
- நோர்வே (60)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (89)
- புதுக்கவிதை (153)
- பூப்புனித நீராட்டு விழா (29)
- பொதறிவுப்போட்டி (7)
- மண்ணின் மைந்தர்கள் (7)
- மரண அறிவித்தல்கள் (189)
- முத்தமிழ் (60)
- எம்மவர் ஆக்கங்கள் (41)
- மெய் (53)
- வர்த்தக விளம்பரம் (39)
- வாரமொரு பெரியவர் (15)
- வாழ்த்துக்கள் (86)
- வினோதமான செய்திகள் (57)
- விரதங்கள் (7)
- வெளியீடுகள் (29)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)
புதிய செய்திகள்
- அடுத்த சாட்டை
- டெல்லியில் தீ விபத்து: 43 பேர் பலி,
- போலி மருத்துவச்சான்றிதழ் பெற்று கிளிநொச்சி யுவதி பேஸ்புக் மூலம் இலட்சக்கணக்கான பணம் மோசடி!
- சுவிஸ் தூதரக பணியாளர் சிஐடியிடம் 5 மணிநேரம் சாட்சியம்!
- தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஞானசார தேரர் கோரிக்கை
- க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எச்சரிக்கை
- நியூசிலந்து எரிமலை குமுறல்; இருபது பேர் காயம்
- வவுனியாவில் போதைப்பொருள் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்துமாறு கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள் தமிழ்
மரணத்தினை மனிதன் முன்கூட்டியே அறிந்தால் அவன் ஒரு விடயத்தினையும் மதிக்கமாட்டான். தன்னிச்சையாகவே எல்லாவற்றினையும் செய்வான் . நாளைக்கு நானே சாகப்போகிறன் யாருக்கு பயப்பிடவேணும்.மரணம் திகதி தெரியாததினால்த்தான் எல்லாவற்றுக்கும் எல்லாரும் பயப்பிடுகிறது.
நாம் ஏன் மரணிக்கிறோம்? மரணம் என்பது வாழ்வின் முடிவா? ஒரு அன்பான தாய் தகப்பன் தனது பிள்ளை சாகவேண்டும் என்று எப்போதவது கருதியதுண்டா?? இல்லாவிடில் எம்மை எல்லாம் படைத்த எல்லாம் வல்ல அன்பான இரக்கமுள்ள கருணையுள்ள கட வுள் கூடி நாங்கள் சாக வேண்டும் ஒருநாளாவது கருதுவரா? முதுமையில் இறப்பதாக இருந்தால் முதுமையை உருவாக்கியது யார்? என்றும் இளமையாக இருக்க ஏன் கடவுள் விடவில்லை? குழந்தைகள் ஏன் மரணிக்கிறார்கள்?? நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை தாய் .தகப்பன் ,மனைவி ,பிள்ளை, உற்றார் உறவு எல்லாம் போலி வாழ்க்கையா ?ஒரு நொடியில் இல்லாதுபோக…. இறைவன் எமக்கு எல்லாம் கொடுத்தது?? ஒரு தாய்தகப்பனோ ,கடவுளோ பிள்ளை சாகவேண்டும் ஒருபோதும் எண்ணமாட்டார்!!! அப்படி என்றால் எம் உறவுகள், நண்பர்கள் எம் கண்முன்னே ஏன் மரணிக்கிறார்கள் ? .கடவுள் அன்பானவர் இல்லையா?,இரக்கம் இல்லாதவரா? உங்கள் கருத்து டன் !!!!எனது கருத்தும்தொடரும்
நான் குறிப்பிட்ட பாடலின் விளக்கத்தைத் தருவதோடு இந்தப் பாடல்கள் சித்தர்பாடல் என்றும் குறிப்பிட்டிருந்தேன். ஒரு அன்பர் இந்தப் பாடல் ஆபாசப் பாடல் என்று குறிப்பிட்டிருந்தார். என் செய்வேன் பராபரமே. எமது பறாளய் தேர் சிற்பத்தின் சிலையின் வடிவத்தைப்பார்த்தீர்களா? அது இன்றைய வயது வந்தோர்க்கான சிலைகள். இதை ஆபாசம் என்றால் மனிதன் தோன்றியிருக்கமாட்டான்.
காலனை விரட்ட சில வழிகள்.
சித்தர்கள் பலர். ஆவர்களுள் பதினெட்டுப் பேர் முதன்மையனவர்கள். இவர்களுள் முதற்சித்தர் எனப்போற்றப்படுபவர் திருமந்திரம் தந்த திருமூலர்;;. ஆவாகளில் ஒருவரான தேரையர் என்ற சித்தர் ஒரு மருத்துவ மேதை. மக்கள் நீண்டகாலம் வாழ பல சில மருத்துவக் குறிப்புகளைத்தந்துள்ளர். அவருடைய பாடலைத்தான் முதலில் எழுதியிருந்தேன். இப் பொழுது அந்தப்பாடலின் விளக்கத்தையும் தருகின்றேன்.
பாடல் விளக்கம்.
பாலுணவை உண்போம்
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது
வெந்நீரில் குளிப்போம்.
புகலில் உடலுறவு கொள்வதையும் தூங்குவதையும் தவிர்ப்போம். கரும்பென இனிப்போராயினும் வயதில் மூத்த பெண்களோடும் வாசக் குழலினை உடைய பொதுமகளிN;ராடும் உடல் உறவு கொள்ளமாட்டோம், காலை இளம் வெயிலில் அலையமாட்டோம்
மலம், சிறுநீர் இவற்றை அடக்கி வைத்திருக்கமாட்டோம்.
படுக்கும் போது எப்போதும் இடது கைப்பக்கமே ஒருக்களித்துப் படுப்போம்
புளித்த தயிரை விரும்பி உண்போம்
முதல்நாள் சமைத்த உணவு அமுதம் போல இருந்தாலும் அதை மறுநாள் உண்ணமாட்டோம்
உலகமே பரிசாகக் கிடைத்தாலும் பசிக்காத போது உணவு உண்ணமாட்டோம். பசித்த பொழுது மட்டுமே உணவு உண்போம்.
மேற்கண்ட நியதிகளைக் வழுவாது கடைப்பிடித்து வந்தால் உலகில் நீண்ட காலம் வாழலாம் என்று அந்தப் பாடல் கூறுகின்றது. இன்
இன்னும் பல பாடல்களும் விளக்கங்களும் இருக்கின்றன. நீங்கள் இந்த மாதிரியான விடயங்களில் அக்கறை காட்டினால் தொடர்ந்தும் எழுதலாம்.
ஆபாசம் என்பது?
வணக்கம்
அமீபா பற்றி தீபன் கூறியிருந்தீர்கள். நன்றி. அமீபா இரண்டாகப் பிரிந்து பெருகுவதாகத்தான் அறிந்தேன். எனினும் அமீபா பற்றிய சிறிய விளக்கத்தையும் தருகின்றேன். இது கற்றதல்ல சுட்டது. அமீபா ஒற்றைச்; சொல் முன்னுயிரி. தன்னுடலின் செல்பிளாசத்தை, தற்காலிகமாக நீட்டி, அத்தகைய நீட்சிகளையே போலிக் கால்களாகப் பயன்படுத்துகின்றது. சில அமீபாக்கள் நன்னீர் ஓட்டைகள் குளங்கள் ஆகியவற்றின் அடிப்பரப்பில் காணப்படுகின்றன. மற்றவை, மனிதர்களின் சமிபாட்டுத்தொகுதியில் வாழ்கின்றன. இவற்றுள் ஒரு வகை, மனிதர்களில் சீதபேதியை உண்டாக்குகிறது. ஒவ்வொரு அமீபையும் ஒரு செல்பிளாசத் துண்டுகளாக விவரிக்கலாம். இன்றும் அமீபாபற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டவண்ணம் இருக்கின்றது. மேலதிகமாகத் தெரிந்தவர்கள் மேலும் பல தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி
வேந்தன்
மரணத்தை முதலில் அறிந்தால் என்ற வினாவே அது தொடர்பான பயத்திலிருந்து தான் தோன்றுகின்றது. பிறக்கும் உயிரினங்கள் இறப்பது என்பது உலக நியதி. விதிவிலக்காக ‘அமீபா’. எனினும் மனிதன் மரணத்தை வெல்லவே முயற்சிக்கின்றான். அதனாலே மூலிகை மருத்துவம் முதல் இன்றைய அதி நவீன மருத்துவ வளர்ச்சியும் ச்pகரத்தை தொட்டு நின்கின்றது. சித்த மருத்துவத்தில் மரணத்தைத் தவிர்ப்பதற்கு பல வழிகள் கூறப்பட்டுள்ளது. அதனாலேயே சித்தர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகின்றது. மரணத்தை வெல்வதற்கு ஒரு சித்தர் பாடல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விளைகின்றேன்.
‘ பாலுண்போம் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்
பகல்புணரோம் பகல் துயிலோம் பருவ முத்த
வேலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம்
இரண்டடக்கோம் ஒன்றைவிட்டோம் இடதுகையில் படுப்போம்
மூலஞ்சேர் கறி நுகரோம் மூத்த தயிர் உண்ணோம்
முதனாளில் சமைத்தகறி அமுதேனினும் அருந்தோம்
நலந்தான் அடைந்திடினும் பசித்தொழிய உண்ணோம்
நமார்க்கிங் கேதுவை நாமிருக்குமிடத்தே.
இந்தப் பாடலில் குறிப்பிட்ட விடயங்களைக் கவனத்தில் கொண்டால் நிச்சயம் மரணத்தை தள்ளிப்போடலம்.
மனிதன் மரணிக்கும் காலத்தை அறிந்துவிட்டால் அவன் நினைத்ததைச் சாதிக்க முயல்வான். நல்ல குணமுடையவன் நல்லதைச் செய்வான். இயற்கை அவ்வாறான வாய்ப்யைத் தரவில்;லை. அப்படி ஒருவாய்ப்பு கிடைத்திருந்தால் உலகம் விசித்திமாக இருந்தி
திரு வேந்தன் அவர்களே, amoeba பிரிந்து பிரிந்து பெருகும் ஒரு உயிர். கருவற்ற கலம் உயிரற்றுப் போக கரு உள்ள கலம் உயிருடன் தப்பிக்கும் .ஆகவே அழிவற்ற பொருள் உலகில் ஏதும் இல்லை, பூமி உட்பட. மேலும் எந்த ஒரு மருத்துவத்தாலும் மரணத்தை தள்ளிப் போட மட்டும் தான் முடியும்.
“முதனாளில் சமைத்தகறி அமுதேனினும் அருந்தோம்”
முத்தான வரி . ஆனால் உண்மையில், கடைகளில், குளிரூட்டியிலுள்ள கோழியை ( பல காலம் முன்பு கொல்லப்பட்ட ) வாங்கி வந்து சமைத்து உண்டு, மீதத்தை இன்னும் இரண்டு வாரம் வைத்து ,சூடாக்கி சூடாக்கி உண்கிறோம். சில வேளை, அக்கோழியே மனிதனாக மறுபிறவி எடுத்து தனது இறைச்சியை உண்ணும் வாய்ப்பு உள்ளது. வேடிக்கையாக இருந்தாலும் யதார்த்தம் இது தான்.
காலத்தின் கோலம் .
வேந்தன் இந்தப்பாடலை எங்கிருந்து எடுத்தீர்கள் வெறும் ஆபாசமான பாடலாக இருக்கிறதே?
அட எனக்கு உந்த பாட்டு ஏன் விளங்கவில்லை என்று யோசிச்சு கொண்டு இருந்தனான். இப்பதான் தெரியுது ஏன் என்று.
ஐயா, இது ஆபாசமென்றால் நாம் பிறப்பதே ஆபாசம் தான்.
எனக்கென்னவோ இது மிகவும் கண்ணியமான கவியாகத்தான் தெரிகிறது.
திரு வேந்தன் அவர்களின் வாசிப்புத் தேடல் வியக்க வருகிறது.
இணையம் ஆரம்பித்த நாளிலிருந்து வெறும் வாசகனாக இருந்த என்னை எழுதத் தூண்டியதே திரு. வேந்தன் ,மனோகரன், சுதர்சன் போன்றவர்களே. கருத்து பகுதி மிகவும் ஆரோக்கியமாகச் செல்கிறது. தயவு செய்து உங்கள் delete பட்டுனுக்கு ஒய்வு குடுத்து விடுங்கள். துணிச்சலான கருத்துக்களை வரவேற்போம். கருத்துப் பகுதியில் மோதுவதால், என்ன, உயிரா போகப் போகிறது?
நன்றி.
தம்பி தீபன் நான் ஆபாசத்தை தவறு என்று சொல்ல வரவில்லை என்னை பொறுத்தளவில் ஆபாசமும் மனித வாழ்வில் ஒரு புனிதமான அங்கம் தான்,நாங்கள் தான் என்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை.சரி நான் ஓய்வெடுத்து கொள்கிறேன் நீங்கள் உங்கள் துணிச்சலான காரியங்களை எடுத்து விட்டுக்கொண்டிருங்கள்.ஆராவது வருங்கால சந்ததியினர் இந்தப்பாடலுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் உங்களிடம் கூட்டிக்கொண்டு வருகிறேன் நீங்கள் அர்த்தம் சொல்லிக்கொடுங்கள் என்ன.
தம்பி றூபன் கருத்துக்களத்தின் நோக்கம் சாத்மீகமான கேள்வி. உங்கள் பதிலின் படி நீங்கள் கம்பி எண்ணும் ஆலோசனை சொல்வது மாதிரி. பண்கொம்.நெற் பண் த.பாலா
யாருக்கு எப்ப மரணிப்பிங்கள் என்டு தெரியவேணும்?
அந்த ஆள் ஒரு துவக்கோட வாங்கோ, உடன நான் சொலுகிறன் நீங்கள் எப்ப மரணிப்பிங்கள் எண்டு நான் சொலுகிறன்.
இது எப்படி?
துவக்கு வேலை செய்யாட்டி???
துவக்குப்பிடியால் அடிக்கவேண்டியதுதான்.
(குத்தரிசி) சோறு சாப்பிட்டு வளர்த்த உடம்பு துவக்கு பிடியை உடைச்சுப்போடும்….
யாருக்குமே தெரியாது எப்போ மரணிப்போம் என்று .ஆனால் ஜனனத்தின் வரவுமுடிவில் மரணத்தில் செலவு .ஆழுக்கொருதேதி வைத்து ஆண்டவன் அழைப்பான் .அதில் யார் அழுதால் அவனுக்கென காரியம் நடக்கும் . வாழும் வாழ்க்கையை நெறி தவறாது வாழ்வோம்.
சாகும்திகதி தெரிஞ்சால் ஒருத்தரும் கடன் தரமாட்டினம் எண்டுதான்
எங்கட நிலைமையை நல்லா விளங்கின கடவுள்
அடுத்த கடனில ஒரு அரிச்சனை செய்யவேணும்
ஆராவது கடன் தாறியளோ நான் இப்ப சாகமாட்டன்.
http://www.kadan.pan
”கடனே வாழ்க்கை”
எடே கடன்காரா எங்கட ஊரிலை பிரபல வட்டிக்கு கடன் கொடுக்கும்
ஒரு பெரியவர் சொன்ன கதையை கேளடா.அப்ப அமளியாய் செல்லடி
பொம்மர் அடி நடந்த நேரம் .அவர் சொன்னார் இனி நான் ஒருத்தருக்கும்
வட்டிக்கு குடுக்கமாட்டன் .அப்ப வந்தவர் கேட்டடார் ஏன் ஐயா அப்பிடி
சொல்லுகிறியல் நாங்கள் அந்தரம் ஆவத்துக்கு ஆரிட்டை போறது எண்டு
அப்ப பெரியவர் சொன்னார் மடையா உனக்கு தெரியாதேடா .நான் காசை
கொடுத்துப்போட்டு வாங்கினவுக்கு செல் விழுந்து செத்தநேண்டால்
நான் பிறகு ஆரிட்டையடா காசை அறவிடுகிறது எண்டு சொன்னார் .
அந்த பெரியவர் இன்றும் செல் அடியோ அன்றில் பொம்மர் அடியோ
படாமல் சுகதேகியாக நம்மூரில் நன்றே வாழ்ந்து கொண்டிருக்கிராரடா
கடன்காரா
மரணத்தை முன்கூட்டியே அறிய முடியும் எப்படி என்றால் குன்றம் செய்தவன் துக்கில் இடப்படும் முன் அறித்து இருக்கின்றன் தனக்கு இன்று இறப்பு என்று மன்றும் தற்கொலை செய்பவன் நேரத்த கணித்து மரணத்தை அறித்து இருக்கின்றன் மன்றும் நிறைய கிறுக்கலாம் நேரம் பண்ற குறை
இது ஒ ரூ வேடிக்கையான கேள்வியும் பதிலும் ஏனெனில் மரணிப்பதை நமக்கு முன்பே தெரிந்து விட்டால் இந்த உலகநாடுகளில் உள்ள அனைத்து தேவ
ஆலயங்களையும் இழுத்து பூட்டி விடுவதாக வேண்டி வரும் ஆகயால் என்னை பொறுத்தவரை இவ் உலகில் மனிதகுலத்தையும் மீறி ஒரு சக்தி உண்டு அவை தான் எம்மை படைத்த ஆண்டவன்
\கார்காரன் எப்பவந்து என்னை சைக்கிளில் அடிப்பான் என்று எனக்கு முன்கூட்டியே தெரியாது/.
\வார புதன் மத்தியானம் சாப்புடுவேனோ என்று எனக்கு தெரியாது, தெரிந்தாலும் சோறுதானோ என்று எனக்கு இப்ப சொல்லேலாது/.
\இவ்வளவு முறிந்து வேலை செய்துகொண்டிருக்கபோகையில் வார வருடம் சம்பள உயர்வு கிடக்குமோ என்று இப்ப நான் அறிந்து கொண்டால் panipulam.net ஐ பார்ப்பதை விட்டுவிட்டு என்னுடைய வேலையை இன்னும் சிறப்பாக செய்துவிடுவேனே – ஏன் வேலைதரும் நிறுவனம் கூட கவிழலாம். என்று கூட தெரியமுடியாமல் உள்ளது/.
மரணிப்பது தெரியாமல் இயல்பாக இருந்துகொண்டிருப்பதே பலருக்கு பாதுகாப்பு – மரணிக்கும் திகதி தெரியநேரிட்டால் நோர்வே தீவில் நடந்த சம்பவங்கள்மாதிரி இன்னும் உலகில் பல நடக்க நேரிடும்.
இதனால விஞ்ஞானிகளை மரணிக்கும் அளவீட்டை கண்டுபிடிக்கும் ஆராச்சியில் இறங்க அரசாங்கங்கள் விஞ்ஞான நிறுவனங்களை தடை செய்துவிடும்.
உ: உலகில் clown என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பு தடை செய்யப்பட்டுள்ளது இதற்க்கு சரியான உதாரணம்.
மரணம்/சாவு பற்றிய நாள் நமக்கு முன்பே தெரிந்து விட்டால் எப்படி இருக்கும் ?
கற்பனைக்கு அப்பால் பட்ட ஒரு விடயம் இது.இருந்தாலும் அதற்காக தான் ஆக்கமும் அழிப்பும் இறைவன் கையில் இருக்கிறது போலும் .எது எப்படி இருந்தாலும் மரணம்/ இறப்பு இல்லாத உயிர்களே இல்லை என்பது மட்டும் உண்மை.
மரணம் இது பற்றி என்ன சொல்ல வருகிறது என்றால் !
“நான் உன்னுடனேயே இருக்கிறேன்.
உனக்காகவே காத்துக்கொண்டிருக்கிறேன் .
என்னுள்ளே ரகசியங்கள் ஏதுமில்லை.
அதனால் கேள்வி கேட்பதை நிறுத்து .
அப்படியே கேட்டாலும் பதில் கிடைக்காது .
வாழ்க்கையை ஒருமுறை வாழ்ந்து பாத்தது விடு ,
அதன் பிறகு என்னை பார்த்து நீ அச்சப்பட வேண்டிய அவசியம் இருக்காது !”
ஒருவன் பிறந்ததும் உடலளவில் ,மூளையளவில்,பொருளாதாரத்தில் வளர்கிறான் என்கிறோம் .ஆனால் உண்மையில் அவன் வளர்வது மரணத்தை நோக்கித் தான் .ஒருவன் பிறக்கும் போதே அவனுடன் மரணமும் பிறக்கிறது. இடையில் இருப்பது ஒரு வாழ்க்கை .அதனை யாரையும் துன்புறுத்தாத நோகடிக்காத வகையில் நேர்மையுடனும் , ஒழுக்கத்துடன் தான் வாழ்ந்து பார்ப்போமே !
சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும் அதனால் தான்.
உயிரினங்கள்,தாவரங்கள் உட்ப்பட சகலதுமே தன் உயிரிழப்பு நிச்சயமே.வாழ்க்கை வாழ்வதற்க்கே வாழும்போது வாழப்பழகாமல் இறந்தபின் இப்படி,அப்படி வாழ்ந்திருக்கலாமோ என விமர்சிப்பதை விட்டுவிட்டு வாழ்க்கையை ரசித்து ருசித்து சமூகத்தொண்டையும் செயதவாறு வாழ்ந்துபாரக்கலாம்.அந்தவாழ்வே சுகமானவாழ்வும், அமைதியான இறப்புமாகும். பண்கொம்.நெற் பண் த.பாலா
மரணம் பயப்படும் ஒரு நிலை அல்ல. . . பயணப்படும் புனித நிலை. ஒரே இடத்தில் தேங்கி இருக்கும் நீர் நிச்சயம் சாக்கடையாக மாறிவிடும். ஓடிக்கொண்டிருக்கின்ற ஆற்று நீரோ இனிமையாகவும் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதுபோலதான் உயிரும் இடம் மாறும்போது அதன் சக்தி மேம்பட்டதாக இருக்கும். மரணம் என்பது மரிப்பது அல்ல . உயிர் மீண்டும் பிறக்க விதைப்பது.
மரணத்தை முன்கூட்டியே அறிய முடியவில்லையா !. மரண நாள் தெரியாவிட்டாலும் பிறக்கும் போதே மரணம் சர்வ நிச்சயம் என்பது தெரியாதோர் இங்கு யாரும் இல்லையே. மேலும், அமரர் சங்கர் அவர்கள் காலமாவதற்கு சரியாக ஒரு வாரம் முன், ஒரு எட்டு வீட்டில் வைத்து சடங்குகள் செய்து கொண்டிருந்த தன மைத்துனரிடம் ,நகைச்சுவையாக, நல்ல தொழில், தொடர்ந்து செய்யும் என்றார். வருந்தத் தக்க விதமாக, அதே மைத்துனர் அடுத்த வாரம் சங்கருக்கே எட்டு செய்ய வேண்டியதை போய் விட்டது.
அத்துடன், இவ்விணையத்தில் ஒரு கவியை பாராட்டி எழுதும் போது கூட, சங்கர் அவர்கள், ஒரு பொத்தானை அழுத்தினால் நாங்கள் சாம்பலாகி விடுவோம், என்ற கருத்துப்பட எழுதியிருந்தார்.இது கூட சரியாக ஒரு வாரம் முன்பு தான் என நினைக்கிறேன். அப்படியானால் ஏதோ ஓர் உள்ளுணர்வு அவரை உந்தியிருக்கிறதா?.விஞ்சானத்தால் இதை விளக்க முடியாது.
தன் ஒரே மகனை இழந்து தவித்த ஒரு ஏழை விதவைத் தாய் அவனது உடலை ஏந்திக் கொண்டு புத்தரிடம் சென்று, தன் மகனை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டினாளாம்.அதற்கு ,புத்தர் ,யாருமே சாகாத ஒரு வீட்டிலிருந்து ஒரு பிடி கடுகு வாங்கி வருமாறு பணித்தாராம் .அந்தத் தாயும் வீடு வீடாக சென்று கேட்ட போது தான் அவளுக்கு உண்மை விளங்கி தன்னை தேற்றிக் கொண்டாளாம்.
இருப்பது ஒரு வாழ்க்கை.அதை அறமாக வாழ்வோம்.
நன்றி