உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஐரோப்பிய பணிப்புலநேயர்களின் கவனத்துக்கு:

 

கலைஞர் டிவி க்கு சொந்தமான ரூ.215 கோடி மதிப்பிலான சொத்துக்களை பணமோசடி

சட்டப்பிரிவின் கீழ் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள அமலாக்கப்பிரிவு முடிவு
செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ரூ 215 கோடி மதிப்பிலான கலைஞர் டிவி சொத்துக்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சொத்துக்கள் உள்ளன  என்றார்.

கலைஞர் டிவியில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளன. அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு 20 சதவீதப் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2 ஜி விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ள டிபி ரியலிட்டியின் சினியுக் நிறுவனத்திலிருந்து ரூ 214 கோடி கடனாகப் பெற்ற விவகாரத்தில்தான் இப்போது கனிமொழியும் சரத்குமாரும் திகாரில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய பணிப்புலநேயர்களின் கவனத்துக்கு:

இன்றிலிருந்து ஐரோப்பிய ஐங்கரன் தொலைக்காட்சியின் சந்தாவுக்கு விசேட விலைக்கழிவிற்கான விளம்பரங்கள் இடம்பெற்றுவருவதாகவும், ஐங்கரன் தொலைக்காட்சியில் புதிய நிகழ்சிகளும் இடம்பெறவில்லை எனவும் பரபரப்பு ஏற்ப்பட்டு வருவதாக கூறப்பட்டுவருவதை கவனத்தில்கொள்ளவும்.

 

One Response to “முக்கிய செய்தி: கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.”

  • T,BALAKUMAR www.panncom.net:

    எப்படியோ நினைச்சனான் இப்படி ஆச்சே என கவலை வேண்டாம்.இதே நிலை கூட ராசா (மின்னாள் தொல்லை தொடர்பு அமைச்சர்) ஒவ்வொருவராய் மாட்டிவிடுகிறார்.அந்த மாட்டல் இறுகப்போக சண் பார்சலும் காணாமல் போகுமாம். பண்கொம்.நெற் பண்.த.பாலா

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்