உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்திருவாரூர் மாவட்ட செயலர் கலைவாணன் என்பவரை போலீசார் கைது செய்ய முயற்சித்போது

போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்த மு.க., ஸ்டாலினையும் போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது போலீசார் ஸ்டாலினுடன்
இருந்த கலைவாணனை கைது செய்ய வந்திருப்பதாக கூறினர். என்ன வழக்கு என்று கூறாமல் கைது
செய்ய விட மாட்டோம் என்று ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து தங்களுடைய ஆதரவாளர்களுடன்
மறியலில் ஈடுபட்டார். இத‌னையடுத்து ஸ்டாலினையும், அவருடன் வந்திருந்த மாஜி
அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன் உள்பட பலரை ஆகியோரையும் போலீசார் கைது
செய்தனர்.

கருணாநிதி பேட்டி

ஸ்டாலின் கைது கண்டித்து இன்று பேட்டியளித்த தி,மு.க., தலைவர் கருணாநிதி
கூறுகையில்; கடந்த ஆட்சியிலும் போராட்டக்காரர்கள் எப்படி நடத்தப்பட்டார் என்பது
எல்லோருக்கும் தெரியும், காலையில் கைது செய்து மாலையில் விடுவோம். ஆனால் தற்போதைய
ஜெயலலிதா ஆட்சியில் பழிவாங்கும் நடவடிக்கையாக நடக்கிறது. இதற்கு மேலும், மேலும்
தூபம் போடும் காவல்துறையின் நடவடிக்கை அத்துமீறி போய்க்கொண்டிருக்கிறது. வரும் 1ம்
தேதி போலீசாருக்கெதிரான போராட்டம் அறவழியில் திட்டமிட்டபடி நடக்கும் இவ்வாறு அவர்
கூறினார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்