உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கள்ளக்காதலனை 2ம் திருமணம் செய்ய இடையூறாக இருந்ததால் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வேலு. சென்ட்ரிங் கான்டிராக்டர். இவரது மனைவி செல்வி(35). இவருக்கு இதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கரிகாலன்(30) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. கடந்த 27ம் தேதி வீட்டில் வேலு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொள்ளையர்கள் தன்னை கட்டிப் போட்டு கணவரை கொன்றுவிட்டு ரூ.5 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றதாக செல்வி போலீசாரிடம் தெரிவித்தார்.

விசாரணையில் கூலிப்படையை ஏவி கள்ளக்காதலன் உதவியுடன் செல்வியே கணவரை கொலை செய்தது தெரியவந்தது. உசிலம்பட்டி டிஎஸ்பி குமார் தலைமையிலான போலீசார் கொலையாளிகளை தேடினர். விசாரணையில் செல்வி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக கரிகாலனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். அவரை 2ம் திருமணம் செய்து இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன் வேலு மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்றோம்.

அவர் தப்பினார். இதையடுத்து கரிகாலன் மூலம் கூலிப்படையினருக்கு ரூ.3 லட்சம் கொடுத்து கணவரை கொல்ல முடிவு செய்தோம். இதற்காக அவர்களுக்கு ரூ.1.6 லட்சம் கொடுத்தோம்.  கரிகாலன், நண்பர் சரவணன், நாகராஜ், ஜெயக்கொடி, மாலுச்சாமி(19), சதீஷ்(19) ஆகியோர் வைத்து சதித்திட்டம் தீட்டினர். கடந்த 26ம் தேதி நள்ளிரவில் கரிகாலன் வீட்டுக்கு வந்தார்.

முதலில் வேலுவை மூச்சுத் திணறடித்துக் கொலை செய்ய முயன்றனர். கணவர் போராட தொடங்கியதால் நான் கால்களை பிடித்துக் கொள்ள, வேலுவின் கழுத்தை அவர்கள் அறுத்ததுடன், மார்பு, வயிறு பகுதிகளிலும் சரமாரியாக குத்தியதில் அவர் இறந்தார். இவ்வாறு வாக்குமூலம் அளித்தார் என்றனர்.

இவ்வழக்கில் செல்வி, கரிகாலன், அன்னம்பார்பட்டி சரவணன்(29), நாவார்பட்டி  சசிக்குமார், கருக்கட்டான்பட்டி நாகராஜ், மாலுச்சாமி மற்றும் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பண்ணைப்பட்டி ஜெயக்கொடியை தேடிவருகின்றனர். கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைக்கப்பட்டனர்.

7 Responses to “கணவனை கொடூரமாக கொலைசெய்த மனைவி.”

 • ஐயோ நல்லகாலம் இந்த விடயத்தை என்ர மனிசி இன்னும் படிக்கவில்லை.இதை தயவு செய்து இனையத்தில இருந்து தூக்குங்கோ.நீங்கள் அவர்களை ஊக்குவிக்கிற மாதிரி எனக்குப் தென்படுகின்றது.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  சின்னபிள்ளையள் இருக்கிற வீட்டில அளவுக்கு மீறி காஸ் இருப்பதும் ஆபத்து. ஆம்பிளையள் இருக்கிற வீடுகளில அளவுக்கு மீறி எண்ணைகள் இருப்பதும் ஆபத்து.

 • சச்சி:

  தொல்காப்பியன் கண்ட கொடுமை பெண் இவள்.

  • சச்சி உவளவை தான் பாரதி கனவு கண்ட புதுமை பெண் .ஓரளவிலை பார்த்தால் உவளவை சம உரிமை கேட்டு போராடுகிராளவை.ஒரு காலத்திலை அதுகும் ஞாயமானது என்று கருதினேன் .உவளவையின்றை
   உந்த மாதிரி வீரச்செயலுகளை பாக்கேக்குல்லை ஆணாதிக்கமும் கொஞ்சம் பிரயோகிக்கப்பட வேணும் போல தான் தெரிகிறது .அவளுக்கென்ன இனி
   வேளா வேளைக்கு கம்பு சோறும் கூழும் கவுன்மேந்து கணக்கிலை கிடைக்கும்

 • T,BALAKUMAR www.panncom.net:

  ஆண்கள் கவனம் த.பாலா

 • தொல்காப்பியன்:

  நாட்டுக்கு மிகவும் தேவை உள்ள பெண்மணி இவள்

  • நாட்டுக்கு மட்டுமல்ல முழு உலகுக்குமே முன்னுதாரணமான எடுத்துக்காட்டான வீர தீர பெண் சிங்கம் .கண்ணகியின் தூரத்து உறவு போல

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்