தமிழில் எழுத
பிரிவுகள்


அமெரிக்காவில் உள்ள ஒகியோ நகரைச் சேர்ந்தவர் அந்தோணி சோவெல். இவர் பெண்களை கடத்தி பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாக்கினார்.
பின்னர் அவர்களின் கை, கால்களை கட்டி கொடூரமாக கொன்றார். அவ்வாறு கொல்லப்பட்ட பெண்களின் உடலை பிளாஸ்டிக் பைகளில் போட்டு தனது வீட்டின் பின்புறம் புதைத்தார்.

இச்சம்பவம் கடந்த 2007ம் ஆண்டு முதல் நடந்தது. பெண்கள் மாயமானதை தொடர்ந்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். இதை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு இவரை பொலிசார் கைது செய்தனர். இவர் மீது கிளேவ் லேண்ட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி டிக் அம்பு ரோஸ் குற்றம் சாட்டப்பட்ட அந்தோணி சோவெல்லுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய இவருக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது தண்டனையை அடுத்த ஆண்டு(2012) அக்டோபர் மாதம் 29ந் திகதி நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

விஷ ஊசி போட்டு இவரது மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதற்கு முன்பு கற்பழிப்பு முயற்சி வழக்கில் சிக்கிய இவர் 15 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்