தமிழில் எழுத
பிரிவுகள்


இரவுவேளையில் நடமாடும் “கிறீஸ் பூதங்கள்” தொடர்பான மிரட்சி காரணமாக கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இயல்புநிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இருட்டியதும் பெண்கள் வீடுகளுக்குள் முடங்கும் அதேநேரம், ஆண்கள் சட்ட அனுமதியின்றி ஆயுதங்களுடன் நடமாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

“கிறீஸ் பூத” அச்சம் காரணமாக நேற்றிரவுவரை குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். பல இடங்களில் தொடர்ந்து அமைதியின்மையும் பதற்றமும் நிலவுகின்றது.

பொத்துவிலில் சாவு
பொத்துவில் பொலிஸ் நிலையப் பகுதியில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில், பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்தார் எனக் கூறப்பட்டது. பொத்துவிலைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான அலிஜார் மொகமட்
மவ்ஜம் என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிறீஸ் பூதம் அச்சம் காரணமாக, யானைக் கணக்கெடுப்புக்குச் சென்ற படையினருக்கும் மக்களுக்கும் இடை யில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட தகறாரே இன்றைய அமைதியின்மைக்குக் காரணம் என்று பொலிஸார் கூறினர்.

கிறீஸ் பூத சந்தேகத்தில் நேற்று முன்தினம் இரவு பொதுமக்களால் பிடித்து ஒப்படைக்கப்பட்ட மூவரைப் பார்வை யிடச் சென்றவர்கள் மீது படையினர் தாக்கினர் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதனைக் கண்டித்து நேற்றுக் காலை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலதிக பொலிஸாரும் அதிரடிப் படை யினரும் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட் டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தக் களேபரத்தில் துப்பாக்கிக் குண்டு தாக்கி ஒருவர் உயிரிழந்தார். ஏற்கனவே அப்புத்தளையில் கிறிஸ் பூத அச்சம் காரணமாக தமிழ் இளைஞர்கள் இருவர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தனர். பொத்துவில் அசம்பாவிதங்களைத் தொடர்ந்து அங்கு நேற்றிரவு முதல் இன்று காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை சம்பவம்
கிறீஸ் பூத அச்சம் காரணமாக நேற்று முன்தினம் இரவு சம்மாந்துறையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சம்மாந்துறை பொலிஸ் நிலையத் துக்கு அருகில் உள்ள கோரக்கோயில் பகுதியில் இரவு 8 மணியளவில் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த இடத்துக்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் அந்தப் பெண்ணுடன் சேஷ்டை விட்டுள்ளனர்.

பெண் கூச்சலிட்டதைத் தொடர்ந்து உதவிக்கு ஓடிவந்தவர்களைக் கண்ட இரு சந்தேகநபர்களும் பொலிஸ் நிலை யத்துக்குள் ஓடிமறைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கற்களை வீசித் தாக்கினர்.

ஹக்கீம் கோரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் பீதியடைந்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹக்கீம், கிறீஸ் பூத அச்சத்தைக் தவிர்க்க நடவடிக்கை எடுக்கும்படி அரசிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகமான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன்அலி விடுத்த அறிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் பாகாப்புச் செயலாளருடன் தொடர்பு கொள்ள நீதி அமைச்சர் மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி தயாரிக்கப்படும்போது, பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர், மவ்ஜம் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்று செய்தி கிடைத்துள்ளது. இதனைக் கட்சி வன்மையாகக் கண்டிக் கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபாய எச்சரிக்கை
இதேவேளை, பொதுமக்கள் சட்டத் தைக் கையில் எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையங்களைத் தாக்கினால் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்