உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்றுப் பாதுகாப்பு ஊழியருக்கும் பொதுமகனுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு ஊழியர் தலையில் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
நஞ்சருந்திய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஒருவரைப் பார்ப்பதற்காகப் பார்வையாளர் நேரம் முடிந்த பின் குறித்த இளைஞன் விடுதிக்குள் நுழைய முற்பட்டுள்ளான்.

அவரை வைத்தியசாலைப் பாதுகாப்பு ஊழியர் மறிக்க, வேறொரு பாதையில் உள்நுழைந்த இளைஞரை அந்தப் பகுதியில் கடமையில் இருந்த பாதுகாப்பு ஊழியர் மறித்துள்ளார். தடுப்பை மீறிச் செல்ல முற்பட்டதால் பாதுகாப்பு ஊழியர் பிடிக்க முயன்ற போது குறித்த இளைஞர் மதிலேறி வெளியே செல்ல முயன்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட நிலத்தில் கிடந்த கற்களாலும் இரும்புக் கம்பிகளாலும் பாதுகாப்பு ஊழியர் மீது இளைஞர் தாக்குதல் நடத்தியுள்ளார்.இதன்போது பாதுகாப்பு ஊழியர் தலையில் காயமடைந்தார். இதனை அடுத்து பாதுகாப்பு ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து அந்த இளைஞனைப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய் யப்படுவார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்