உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இழப்புக்களின் வேதனைகளை குறைப்பதற்காக- எம்மை சமாதானப்படுத்துவதற்காக நாம் எப்படித்தான் தேற்றினாலும் ஆறுதலடையாமல் மனம் தவிக்கின்றது. விமலன் இயற்கையெய்தியமை குறித்து அவரது குடும்பத்தினர் அமைதியடையலாம். ஆனால் மன்றம் என்ற அமைப்பு ஆறுதலடைந்துவிட முடியாது. அவரது இழப்பு கனதியானது.மன்றம் உருவாகிய போது அதனை பிரதி பண்ணி சிறுவயதிலேயே அவரை ஒத்த சிறுவர்களையெல்லாம் ஒன்றிணைத்து அவரது பெரியம்மாவின் மனையில் ஒரு சிறுவர் மன்றத்தை தொடக்கினார். இல்லம் பிரித்து விளையாட்டுப்போட்டிகள் நடாத்தினார். தீபாவளி தினத்தன்று மேடை அமைத்து நாடகம் நடனம் எல்லாம் நெறிப்படுத்தி நடாத்தினார். சிறுவர்களின் தொகை கூட தென்னைமரத்தில் ஓலை வெட்டப்போய் அதனால் கோபம் கொண்ட ‍அவரது பெத்தாச்சி(அம்மம்மா) ஏசிவிட இடத்தை மாற்றி மன்றம் பல இடங்களில் தொடர்ந்தது. சிறுவர்கள் கூடி ஒரு வளவில் நிர்வாகம் தெரிவு செய்தோம். அதில் அவர் தலைவராகவும் நான் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டோம். நான் செயலாளர் என்றாலும் எனது வேலைகள் முழுவதையும் அவரே செய்வார். குழந்தைவேலு அவர்களின் வீட்டில் மேடை கட்டி நாடகம் போட்டோம். நான் பாரதி பாஸ்கர் விசி என்று எங்கள் வட்டம் விரியும். ஏழாம் எட்டாம் வகுப்பு படித்த காலத்தில் மறுமலர்ச்சி மன்ற ஆண்டுவிழாவில் நாளைய உலகம் என்ற நாடகத்தை நடித்தோம். அந்த காலத்தில் தான் கலைமுத்துக்கள் என்ற கையெழுத்துப்பிரதியை வெளியிட்டோம். அப்பொழுதுதான் எங்களது எழுத்துக்கள் பயில் களம் தொடங்கியது.

1980ம் ஆண்டு நிர்வாகசபைத் தெரிவின் போது மன்றத்தில் உபசெயலாளராக தெரிவு செய்யப்பட்டார். அப்போது அவரது வயது 18. செயலாளராக இரத்தினராசாவும் உபசெயலாளராக இவரும் இணைந்து மன்றத்தில் பலவிடயங்களை நடைமுறைப்படுத்தினர். பாலர் பாடசாலை மேம்பாடு பற்றியும் ஆராய்ந்தார்கள். இது பற்றி கிராமிய மீளாய்வுகுழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் குழுவில் இவரும் ஈடுபட்டார். கூட்ட அறிக்கைகளை உபசெயலாளரான அவர் எழுதினார். அச்சமயத்தில் அவர் கூட்டங்களில் பேச்சாளராக உருவாகினார். இசைக்கலை பற்றி ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். சினிமாக் கலையும் கவிதைக் கலையும் பற்றி இன்னொரு கூட்டத்தில் உரையாற்றினார். சீதனத்தால் நன்மையா தீமையா எனும் தலைப்பில் நன்மை என வாதிட்டோர் தலைப்பில் மன்றத்தின் சார்பில் விவாதித்த மன்ற குழுவுக்கு விமலன் அவர்கள் தலைமை தாங்கினார்.

1981இல் அவர் மன்றத்தின் செயலாளராக தெரிவுசெய்யப்பட்டார். அப்போது மன்றத்தினை மிகவும் சிறப்பாக நிர்வகித்தார். கலை இலக்கிய வட்டம் ஒன்றை உருவாக்கி அதன் பொறுப்பாளராக நான் உருவாக காரணமாக இருந்தார். சிறுகதை கவிதை போன்ற ஆக்க இலக்கியங்களை படைத்தார். மன்ற ஆண்டுவிழாவில் இலட்சியங்கள் அழிகின்றன என்ற நாடகத்தினை எழுதி இயக்கினார். மெய்வல்லுநர் போட்டியினை சிறப்பாக நடாத்தினார். கூட்டங்களை கூட்டினார். இவர் செயலாளராக இருந்த போது நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு கொப்பிகள் கொடுக்கப்பட்டு அவர்கள் தமது துறைசார்ந்த செயற்பாடுகளை அதில் எழுதி கூட்டத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என அறிவித்தார். மன்றத்தின் 9வது ஆண்டு அது. ஒவ்வொரு நிகழ்வும் சிறப்பாக நடந்தன.

தொடர்ந்த 10வது ஆண்டு நிர்வாகசபை தெரிவானது பலத்த போட்டிக்கு மத்தியில் நடந்தது. செயலாளர் பதவிக்காக க. விமலன் அ.பகீரதன் ஆகியோரின் பெயர்கள் வாக்களிப்பிற்கு விடப்பட்டன. 23 வாக்குகளைப் பெற்று விமலன் அவர்கள் மீண்டும் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். 5 வாக்குகளை மட்டுமே பெற்ற நான் உப செயலாளராக தெரிவு செய்யப்பட்டேன். 81ம் ஆண்டு நிர்வாகத்திற்கும் 82 ம் ஆண்டு நிர்வாகத்திற்கும் தவராசா தலைமை தாங்கினார். இந்த ஆண்டில் அம்பாள் சனசமூக நிலையத்தினருடன் இணைந்து கல்வி வெள்ளையறிக்கை எதிர்ப்புக்கூட்டம் அம்பாள் சனசமூக நிலைய முன்றலில் நடாத்தப்பட்டது. மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மன்றத்தில் வெகு கோலாகலமாக நடைபெற்றது. அதில் இடம்பெற்ற கவியரங்கில் கவிதை சமர்ப்பித்தார். ஒரு கூட்டத்தில் திருமணமுறைகளும் சட்டமும் என்ற தலைப்பில் விமலன் அவர்கள் சிறப்பான உரை ஒன்றை ஆற்றினார். இன்னொரு கூட்டத்தில் பாரதியும் சாதியமைப்பும் என்ற தலைப்பிலான உரை ஒன்றை ஆற்றினார். இவர் எழுதிய சிறுகதைகளில் ஒன்று உண்மை ஒன்று பெட்டிசமாகிறது. இருநாட்கள் இடம்பெற்ற ஆண்டு நிறைவுவிழாவில் கவியரங்கு விவாத அரங்குகளில் பங்கேற்றதுடன் காரியங்களின் காரணங்கள் என்ற நாடகத்தினை எழுதி இயக்கினார். மன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது அவரது நிர்வாக ஆற்றலையும் செயற்படு திறனையும் கண்டு வியந்திருக்கின்றேன்.

1995 இடம்பெயர்வுக்குபின் மன்றத்தின் செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டி மன்றத்தின் இயக்கத்தில் கனடா வாழ் உறுப்பினர்களின் உதவியை கோரி நான் கடிதங்கள் எழுதி தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அதற்கான ஒத்துழைப்பை வழங்கி விமலன் அவர்களின் முயற்சியால் ஒரு லட்சம் ரூபா சேகரித்திருந்தனர்இ அந்த பணத்தினை நிரந்தர வைப்பிலிட்டு வட்டி பணத்தில் மன்றத்தில் பத்திரிகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. 2004ல் கணனி கல்வியை வழங்கும் வகையில் விமலன் அவர்களின் முயற்சியால் கனடாவிலுள்ள மன்ற அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் கணனி அறை கட்டப்பட்டது. பின்பு போர் உக்கிரமாக நடந்த போது மன்ற செயல்பாடுகள் தொய்வடைந்த போதும் கல்விமுயற்சிகள் தொடரவேண்டும் என என்னிடம் பல முறை கூறியிருந்தார். அந்த வகையில் நாம் ஆங்கில போட்டி நடாத்தி அம்பாள் சனசமூக நிலைய முன்றலில் விழா அமைத்து போட்டிகளுக்கு பரிசில் வழங்கவும் ஆங்கில வகுப்பை சத்தியன் மூலம் நடாத்தவும் மன்றத்தின் நெருங்கிய அங்கத்தவர்களிடம் நிதி சேகரித்து அனுப்பியிருந்தார். 2009போர் முடிவின் பின் கனடா வாழ் அங்கத்தினர் ஆண்டுதோறும் சந்தாவழங்க வேண்டும் என்றும் அந்த நிதியை கொண்டு மன்ற நடைமுறை செலவீனங்களை பொறுப்பேற்று மன்ற செயற்பாடுகளை செய்யவேண்டும் என்ற எனது கோரிக்கையை விமலன் அவர்கள் ஏற்று அதற்கு ஏற்ப மன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து அதனில் தொலைபேசி மூலம் என்னையும் பேச வைத்து மன்ற செயற்பாடுகளை ஒரு படி உயர்த்தினார். மன்ற அபிவிருத்தி திட்டத்தின் செயல்வடிவத்தை உருவாக்கும் விதத்தில் இறுதிக் காலத்தில் பலருடம் தொலைபேசிமூலமும் ஈமெயில் மூலமும் உரையாடி கடுமையாக உழைத்து இறுதியாக ஒன்றுகூடிதீர்மானிப்போம் என்ற தகவலை எனக்கு தந்து திடீரென மறைந்த அவரது இழப்பை மன்றம் இயல்பானது என எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

மன்றத்தில் என்ன நடக்கிறது என்று தொலைபேசியில் ஒலிக்கும் அவரது குரல் இன்னும் எனது செவிப்பாறையில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

அழ பகீரதன்
தலைவர்
மறுமலர்ச்சி மன்றம்
காலையடி
பண்டத்தரிப்பு

25 Responses to “விமலனும் மன்றமும்”

 • VK (Vaigunthan Kanthasamy):

  முதல் கண் எல்லோருக்கும் நான் மிக மிக நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். உங்கள் உடைய எல்லவிதம் ஆனா சப்போர்ட் இற்கும் வேலைகளுக்கும் மிக்க மிக்க நன்றி. என்னுடைய அண்ணாவின் இழப்பு உண்மையில் ஒரு மதம் போக அதன் ஆழம் இன்னமும் என் குடும்பத்தில் கூடி கொண்டே போகிறது. அவர் எல்லோரிலும் அக்கறை கூடியவர். குடும்பமும் சரி கிராமமும் சரி. அது அவரின் இயல்பு. அதனால் அவரின் இளப்பை ஈடுசெய்ய முடியவில்லை. அவருக்குள் சிறு வயதில் இருந்து எரித்து கொண்டு இருந்த நெருப்பு தான் அவரை இவள்ளவு குறுகிய காலத்தில் அவ்வளவு வேலை செச்யவைத்தது. அவர் நெருப்பில் அணைதாலும் அதில் ஒரு தீபம் ஏற்றி வைக்கும் உங்களுக்கு நன்றி. இதற்கு நானும் என் பங்கை செய்வேன்.

 • வணக்கம்
  பகி விமலனின் பெயரில் கந்தையா மனோகரன் உருவாக்கியுள்ள நிதியத்தை உங்களுடன் சேர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். நீங்களும் அவருடைய திட்டத்தில் முதன்மைப் பங்காளி என்றும் கூறினார். உருவாக்கப்படும் நிதியம் ஒன்றாக இருக்க வேண்டும். வங்கிக்கணக்கு விபரங்களை உடனடியாகத் தெரிவிக்கவும். இங்கு கனடாவில் பல நண்பர்கள் அதற்கான பங்களிப்பைத் தருவதற்கு தயாராக உள்ளார்கள். அவர்களது பங்களிப்பு விபரங்கள் இணையத்தினூடாக அனைவருக்கும் தெரிவிக்கப்படும். நீங்களும் கந்தையா மனோகரனும் நிதியம் செய்யும் செயல்ப்பாடுகளைத் தெரியப்படுத்தவும். அது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
  நன்றி-

  • அழகரத்தினம் ப‍கீரதன்:

   நன்றி விரைவில் தொடர்வேன். அதுவே எனது பணி

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   விஜி அண்ணை,
   பங்களிங்க போகின்றவர்களின் தகவல்களை முன்கூட்டி (இணையங்களில்) அறிவதை விட அவர்களின் பங்களிப்பின் மூலம் ஊரில் நிறைவேற்றப்பட்ட காரியங்களை (பின்) அறிவதிலேயே நாம் வாசகர்கள் ஆர்வம் கூட காட்டுகிறோம். (பகியண்ணை) காசெடுக்க வங்கிக்கு போகும்போது உ சைக்கிளால் விழுந்தது, நாய் கடிச்சது என்றெல்லாம் அறிந்து கொண்டிருப்பது பற்றி எல்லாம் எமக்கு வாசகர்களுக்கு ஆர்வம் இல்லை.
   தயவு செய்து செயலில் இறங்கவும் அங்கு பல பிரச்சனைகள் எமது கண்களுக்கு எட்டாமல் உள்ளதை அறிந்துள்ளோம்.
   4,000 ஊரவர்கள் வாழும் நாட்டிலிருந்து 20 நல்ல உள்ளங்கள் செய்ய போகும் பங்களிப்பு ஊரில் பிரமாண்டமான மாற்றத்தை அளிக்கும் என்று நம்புகிறோம்.

   • சுதர்சன் சங்கரின் 31 ஆம் நாள் நினைவு நாளில் எனக்கு ஒரு சிம்பிள்
    ஐடியா தோன்றினது .இஞ்சை கொழும்பில வசுவிலை போய்கொண்டிருக்கேகை வெள்ளை காரன் காலத்திலை வைச்ச ரோட்டு
    பெயர் ஒண்டை இப்ப உயிரோடு இருக்கும் ஒருவரின் பெயராக மாத்தி இருந்தது .(அது பெரும்.சர்வதேச புகழ் வாய்ந்த Dr .லெஸ்டர் ஜேம்ஸ் peris ) வசுவிலை இருந்துகொண்டே பகியுடன் தொடர்பு கொண்டு செலவும்
    இன்றி சிரமமும் இன்றி மன்றத்துக்கு போற ஒழுங்கைக்கு சங்கர் ஒழுங்கை எண்டு ஒரு பெயர் பலகை நாட்டலாம் என்றேன் .அதுக்கு பகியின் பதில்
    நல்ல ஐடியா தான் அனால் அண்டைக்கு இரவே வந்து கழட்டி எறிஞ்சு போடுவாங்கள் என்றார் .இது எப்பிடி ? இத்தாண்டா நம்ம ஊரு .

  • விஜி ஆதரவுக்கு நன்றி .ஆரம்ப நகர்வு நடந்து கொண்டிருக்கிறது.விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது .அடுத்த மாதம் ஊர் போக உத்தேசம் .அப்போ நான் சுமாரான ஒரு தொகையை வைப்பிலிட்டு நிதியம் ஆரம்பிக்கப்படும் .பிரக்கராசி தேவரின் இலவச சட்ட உபதேசங்களுடன் முறையாக பதிவு செய்த பின் விபரங்கள் அறியத்தரப்படும் .எம்மூரில் உள்ள ஐந்து பதிவு செய்யப்பட்ட சனச சமூக நிலையங்களுடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது .பகியுடன் கூட
   தம்பி யாதவனின் பங்களிப்பும் போற்றக்கொடியது .போற்றும் மனிதர்
   போற்றட்டும் நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டும் .நாம் எம்வழி செல்வோம் இந்த நிதியம் இந்த செயற்பாட்டுக்கு மட்டும் மடுப்படுத்தப்பட்டிருக்கும் .

 • அன்புடையீர்
  நண்பன் விமலனின் நினைவுகளை அவ்வப்போது இந்த இணையம் பகிர்ந்து கொள்வது வரவேற்கத்தக்கது. இந்த நினைவுப் பகிர்வோடு நின்று விடாது அவர் பெயர் நிலைக்க கந்தையா மனோகரன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள விமலன் நிதியத்தை வலுப்படுத்த முன்வாருங்கள் கனடாவில் பல உறவுகள் இந்தத்திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ளார்கள். இந்தத் திட்டத்திற்கு உதவுவதன் மூலம் எமது மாணவர்களின் கல்வித்திறனை வளர்ப்போம்.
  நன்றி-

  • theepan:

   நிச்சயமாக.திரு .மனோகரன் அவர்கள் மிகவும் நேர்மையானவர்.அவர் எவ்வளோவோ காலமாக படிக்கும் பிள்ளைகளை ஊக்குவித்துக்கொண்டு தான் இருக்கிறார்.ஆனால் என்ன அவர் அதை விளம்பரப் படுத்தியதில்லை

   • எனக்கு தீபன் என்பவர் யார் என்று அறியேன் .இருந்தும் அவர் என்னை யார் என்பதை ஓரளவாவது அறிந்து உள்ளார் என்பதில் மகிழ்ச்சியே .உந்த விடயம் திடீர் என்று தோன்றியதல்ல .2010 இல் அம்மன் கோயில் திருவிழாவுக்கு ஊர் சென்ற சமயம் ஊர் நிலவரங்களை நேரில் தரிசித்து
    அதை தொடர்ந்து அயலூர் நீண்ட கால நண்பர்களுடனான உரை ஆடல்களிளின் போது சில சந்தர்ப்பங்களில் வெட்கி தலை குனியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன் .அதன் வெளிப்பாடே இந்த மாணவர்களுக்கான
    ஊக்குவிப்பு திட்டத்தின் தோற்றம் அது சரியாக ஒரு வருடத்தில் சாத்தியமாகின்றது .சுதர்சன் சொல்வதுபோல் இது மஜிக் மாதிரி செய்யக்கூடிய விடயமல்ல .சாகரின் மறைவுக்கு முதலே பாலகுமார் மற்றும் இணையத்தின் இராமச்சந்திரன் பகி போன்றவர்களுடன் விரிவாக
    உரை ஆடிஉள்ளேன் .சங்கரை பற்றி ஓரளவு அறிந்திருந்தேன் இணையம் எம்மிருவரையும் இருக்க இணைத்தது .அவரின் மறைவு என்னை மிகவும் வாட்டியது .அவரின் மனிதாப பணிகளை மதித்து கௌரவித்து அவரின் பெயரை நிதியத்துக்கு வழங்கினேன் எனக்கு விளம்பரம் தேடவேணும்
    எண்டால் நான் என்ரை பெயரில் தொடங்கல்லாம் தானே .கோயிலுக்கு மணிக்கூடு கோபுரத்தை எழுப்பிப்போட்டு கந்தையா மனோகரன் உபயம் எண்டு போடுகிறமாதிரி .

    • இணையத்தார் மன்னிக்கவேணும் நான் ஒரு தந்திரோபாயத்தை கையாளுகின்றேன்.அதாகப்பட்டது இப்போ நான் கடலில் சஞ்சரிப்பதால் எந்நேரமும் தொலைபேசி இணைப்பை இழந்து இணையத்துடனான தொடர்பு
     துண்டிக்கப்படலாம் என்பதால் முடித்த அளவு type பண்ணியதை விட்டு விட்டு துண்டு துண்டாக அனுப்புகிறேன் .மன்னிக்கவும் .ஆரம்பத்தில் தனியனாக நின்று செயல்படவே உத்தேசித்தேன் .நீண்ட கால நகர்வுக்கும்
     இதன் இஸ்திரதன்மை ஆகியவற்றின் பொருட்டும் சங்கரின் மறைவுக்கு பின்னான response கலை கருத்தில் கொண்டும் என் முடிவில் சில மாற்றங்களை செய்ய முனைந்தேன் .அதற்கான சுதர்சனின் கருத்துக்கள் என்னை கொஞ்சம் சோர்வடைய செய்த போதும் அதே கருத்துக்கள்
     நியூட்டன் இனின் விதியை போல் மெண்டு உட்சாகப்படுத்தியது .என் குடும்ப அங்கத்தினர் சிலர் சொன்னார்கள் உனக்கென்ன விசரோ என்று
     நான் அதை பொருட்படுத்தவில்லை .பல ஆண்டு காலமாக என் மனைவிக்கு கூட தெரியாமல் பல நிதி பங்களிப்பை சமூக மேம்பாட்டுக்க செய்து வந்துகொண்டிருக்கிறேன் .மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை என்பது என் policy .அண்மையில் கூட என் உறவினர் ஒருவரின் (அவருக்கு
     தொழில் ஒன்றும் இல்லை )மகன் வைத்தியக் கல்லூரிக்கு நுழைவதற்கான
     சந்தர்பத்தை எதிர்நோக்கி உள்ளார் .ஊர் சென்ற பொழுது அவருக்க் சொன்னேன் உன் பொடியை ஊக்குவிப்பதன் நிமித்தம் அவனின் பெயருக்கு
     ஒரு தொகை பணத்தை வங்கியில் வைப்பிளிடுகிறேன் என்று சொன்னேன்
     அவர் வீடு போய் பெண்கள் சாம்ராஜித்துடனான கலந்துரை ஆடலின் பின்
     அதை ஏற்க மறுத்துவிட்டார் .இதுதான் நாம் வாழும் பாழ்பட்ட சமூகம் .
     ஆரம்ப கட்ட நடவடிக்கையாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன .அங்கு கூட பகி மற்றும் யாதவனுக்கு நான் கூறி உள்ளேன் எந்த இடத்திலும்
     என் பெயரை குறிப்பிட வேண்டாம் என்று .நான் election இக்கு நிக்கவில்லை
     தனியாக நின்று செயல் பட முடியும் .நிதியை பெருக்க பல்வேறு திட்டங்கள் கை வசம் .இருந்தும் என் தொழில் அதுக்கு இடம் தருகிரதில்லை .இது உளத்து இல்லை .எம்முன்னோர் உளத்தி சம்பாரிச்ச பணத்தில் திண்டு வளர்ந்த உடல் இது .ஆனாலும் இது உளத்து இல்லை அப்பட்டமான
     சமூகத்தின் பால் உள்ள பற்றும் அக்கறையும் மட்டுமே .இங்கு தீபத்தை
     பாணி அடிக்க எந்த ஒரு சந்தர்பமும் கிடையாது .ஏனென்றால் ஆருக்கு
     தீபம் கொடுக்கப்படுகிறது எவ்வளவு எத்தனை காலம் .சிம்பிள் maths .
     ஆனால் ஒரு .

     • கட்டிடத்தை எழுப்பும் போது ஐஞ்சு பைகட் சீமந்து வாங்கிப்போட்டு பத்து
      பைகட் எண்டு கணக்கு காட்டலாம் .போக்குவரத்து சிலவு ,தேநீர் செலவு
      எண்டெல்லாம் பாண அக்கவுண்டு காட்டலாம் .உந்தமாதிரி புலுடாக்கள்
      இந்த விடயத்தில் இல்லை என்பதை கருத்தில் கொள்ளவும் .கோடான கோடி பணம் செலவு பண்ணப்படுகிறது .வெறும் பேப்பரிலை எழுதின
      வரவு செலவு அறிக்கைகளை பார்த்து ஆனந்தமடையும் எம் பாமரர்களை
      நோக்கையில் பரிதாபமாக உள்ளது .சரியான முறையில் சொல்வதானால்
      உந்த மேட்டர் கள் முறையான பதிவு செய்யப்பட்ட எண்பார்வை நிறுவனத்தினால் (audit firm ) பரிசோதிக்கப்பட்டு பட்டயக் கணக்காளர் (charted
      accounant ) ஒருவரினால் உறுதிப்படுத்தப்படவேண்டும .செயவேர்களா ?
      எனவே எழுதுவதென்றால் நிறைய உண்டு .உங்களுக்கும் அலுப்ப்பு தட்டிவிடும் என்பதால் இத்துடன் முடித்து யதார்த்தங்களை புரிந்து
      யதார்த்தவாதிகளாய் வாழ முனைவோம் .நன்றி வணக்கம் .

     • சுதர்சன்:

      நீங்கள் ஆரம்பத்தில் நடைமுறை சிக்கல்களை உணர்ந்து ஒரு தனி நபரின் திட்டத்தை பிரகடனப்படுத்துகிறீர்கள் என்று பெருமை பட்டேன், வாழ்த்தினேன். அது பின்னர் உங்கள் கைகளிலிருந்து 3 தசாப்தங்கள் காலங்கள் இயங்கி கொண்டிருக்கும் அமைப்பிற்கு கைமாற்றப்பட்டத்தை அறிந்த பின்தான் என் வாழ்த்தை திருப்பி பெற்றுக்கொண்டேன்.
      நாட்டில் இருப்பவர் ஒருவர் இந்த யோசனையை முன் வைத்தவுடன் பலர் உங்களுடன் இணைகிறார்கள், உங்களின் concept திசை திரும்பி போகும் என்பது தான் என் அச்சம். நாட்டில் இருக்கும் மனோகரன் என்பவர் தொடங்கும் வரை அவர்கள் காற்றுக்கொண்டு இருந்தார்களா, அவர்களால் தனிய இயங்க முடியாதா என்பது எனக்கு குழந்தை தனமாக இருந்தது, இப்பவும் இருக்கிறது.
      நீங்கள் கூறியது போல் சீமந்து பைகள் கணக்குகள் மாதிரி இனி இந்த திட்டத்தில் பல சிக்கல்கள் இடம்பெறுவதற்கு சந்தர்ப்பங்கள் கூடவே உள்ளது.
      குறை நினைப்பவர்கள் என்னை மன்னிக்கவும்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   ஒரு தனியவரின் திட்டத்தை இயங்கி கொண்டிருக்கும் அமைப்பின் ஊடாக செய்வதென்று தொடக்கி வரைபடங்கள், கூட்டங்கள், சந்திப்புகள், அங்கத்துவர்களின் பங்களிப்புகள்/தலையீடுகள்/எதிர்ப்புகள், நிர்வாக மாற்றங்கள் என்று வித விதமான காரணங்களை வைத்து காலங்களை இழுத்தடிக்காமல் ´இன்றைய´ தேவைகளை ´இன்றே´ பூர்த்தி செய்வது எதிர்காலத்தில் எமது ஊரில் illiterates (தமிழில் சொன்னால் அநாகரிகமாக இருக்கும்; admin வெட்டுவார்) என்ற வகை இல்லாமல் தவிர்க்கலாம்.
   அத்தியாவசியங்களை அன்றே செய்தல் சிறந்தது – ஆடம்பரங்களை ஆடி பாடி செய்தல் பலன்.
   என் வீடு, என் குடும்பம், என் வேலை, என் வளர்ச்சி என்று மட்டும் யோசிப்பவன், ஒரு பொடிப்பயல் – நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்.

  • அழகரத்தினம் ப‍கீரதன்:

   வேந்தன் அவர்களுக்கு உங்கள் கனவை நனவாக்கும் வித‍த்தில் சங்கர் ஞாபகார்த்த அறக்கட்டளை (தர்ம சாதனம்) ஒன்றை உருவாக்கி முதல் கட்டமாக சேமிப்பு கணக்கு ஒன்றை இலங்கை வங்கியில் நடைமுறைப்படுத்த இருக்கின்றேன். அதற்கு சங்கரின் உறவினர்கள் மன்ற நண்பர்கள் அனைவரினதும் ஒட்டுமொத்த பங்களிப்புக்களை கோரிநிற்கின்றேன். வீண் விவாதங்களை தவிர்த்து ஆக்கபூர்வமான முறையில் இதற்கு உதவுமாறு வேண்டுகின்றேன்.

 • விமலின் இழப்பு மன்றத்தின் வளர்ச்சிக்கு என்றும் ஈடு செய்யமுடியாத பெரும் இழப்பு . . விமலின் சாந்திக்கு அவர் மேற்கொண்ட பணிகளை தொய்வின்றி தொடர்ந்து செய்வதே அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன். அன்பான நண்பர்களே தோழர்களே அன்புடன் வேண்டுகிறேன் தொய்வின்றி துரிதமாக இயங்கி மன்றத்தின் அபிவிருத்திக்கு அவர் எடுத்த முயர்ச்சிகளை திறம்பட நடைமுறைப்படுத்தி விரைவாகச் செய்யவேண்டும் என்பதே அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனும் எனது அவாவும்!!!!

  • இரங்கல்நாதன்:

   விமலனின் சாந்தியை பற்றி பேசியே மட்டும் காட்டுகிறீர்கள்
   விமலனின் இறுதி கிரிகையின் பிண்டம் கடலில் கரைந்து போக முன் பட் வைசெர் பியரின் ருசியை ரசித்தவர் நீங்கள் முதலில் செயலில் இறங்கி காட்டவும். அதன் பின் நாங்கள் உங்கள் பின் தொடர்கிறோம்.
   மற்றவர்களை தூண்ட முன் நாம் முதலில் துயர் எழ வேண்டும்
   எம்மாலும் எழுதி எழுதி நேரத்தை கடக்க முடியும்

   • unnaippol oruvan:

    அசிட்டே அடிக்கினம் ..பெயர் சொல்லவா பயம்

   • இரங்கல்நாதன் நீ இரங்கினாலும் சுப்ஜெக்ட் ஐ பிழை விட்டுவிட்டாய் அண்ணை.உந்த பிண்டம் என்பது இறுதி கிரிகைகளில்இல்லை அண்ணை
    அது அந்தியேட்டி கிரிகைகளில் செய்கிற ஐட்டம் .இறுதி கிரிகைகளில்
    அஸ்தி கரைத்தல் .அது சரி எதோ பீர் களை பற்றி எழுதி இருந்தாய் .
    அந்த brand எங்களுக்கு பரிச்சியமில்லை .இஞ்சை எங்கட பொடியள் இப்ப
    அடிக்கிறது ஸ்ட்ரோங் எண்டு ஒரு item .alcahole percentage வலு உச்சம் .
    செத்தவீட்டில் கவலைக்கும் கலியாணவீட்டில் சந்தோசத்துக்கும் ,எட்டு
    வீட்டில் படையல் சோத்துடன் உள்ள நண்டு ,கணவாய் .இறால் ,கூழ்
    போன்ற item களை ஒரு பிடி பிடிப்பதற்காக இன்று நேற்றல்ல தொன்று
    தொட்ட காலம் முதல் நம்முன்னோரால் கடை பிடிக்க பட்டுவந்த ஒரு
    கலாசார மரபு அண்ணை .ஏழை எளியதுகளிளிருந்து மேட்டு குடியினர்
    வரை இன்று கூட பின்பற்றும் ஒரு மரபு .உதை எல்லாம் உவ்வளவு
    பெரிது படுத்த தேவைல்ல்லை. அவர்கள் உள்ளே போட்டுவிட்டு ஆடி பாடி
    கும்மாளம் கொட்டி இருந்தால் அது குறை கூற கூடிய ஒன்றே .இது அப்படி அல்ல அவரின் இழப்பை தான்கமுடியாமைய்நால் .அவர்கள் தேடிய ஒரு
    வாடி கால் ஆக கருதலாம் தானே .என் கருத்துக்களில் தவறு ஏதும் இருந்தால் மன்னித்தருளவும் .நன்றிகள் பல

 • வாழ்க்கை வாழ்வதற்கு என்று மட்டும் கருதாமல் மற்றவர்கள் நலனுக்கும் என்றே வாழ்ந்து இடையிலே எங்களை விட்டுப் பிரிந்த எங்கள் சங்கர் அண்ணனை என்றுமே எங்களால் மறக்க முடியாது.அவர் என்னுடன் உரையாடிய இறுதி வார்த்தைகள் என்னுள் அசைபோட்டுக் கொண்டே இருக்கின்றன.உங்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டி நிற்கும்
  பண்கலை பண்பாட்டுக் கழக கனடாத் தோழர்கள்,
  நிர்வாகிகள்.நண்பர்கள்.

 • n.ilankannan:

  ந.இளங்கண்ணன்
  எங்களது விலை மதிப்பற்ற பெரும் பொக்கிஷம்.விசு.விமலன் (சங்கர்)
  17 .07 .2011.ஞாயிறு மாலை எங்களது காதில் பேரிடி ஒன்று விழுந்தது ஆற்று
  வெள்ள நீரோட்டம் சங்கராவின் உயிரைக் கவர்ந்து விட்டதென்று.அப்ப அசை
  வற்று நிண்டதுதான் மாதம் ஒன்று போயும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப வில்லை.அவர் அலுக்காத சலுக்காத கடமைவீரன் (இரும்பு மனிதன்)
  அவர் சேவைகளை எளிதில் சொல்லிமுடிக்க முடியாது.பகிரதன் சொன்னது
  கூட கொஞ்சம்தான்.அவர் பிரிவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த
  அனுதாபங்கள்.நன்றி
  ந.இளங்கண்ணன்.

 • theebam.com:

  சங்கரின் மறைவின் வெற்றிடம் நிரப்பப்பட முடியாதது.அதேவேளை சங்கரின் நினைவுகள் மறக்கப்பட முடியாதவை.
  ——–தீபம்-செல்லத்துரை,மனுவேந்தன்

 • தகவல்களில் உள்ள சுவாரிசியத்தை விட தார்ப்பரியங்கள் மற்றும் யதார்த்தங்களை உணர முற்படுங்கள் .இப்படியான முயற்ச்சிகள் தான்
  எங்கள் கிராமத்தவர்த்களின் நவீன சிந்தனைக்கு வித்திட்ட ஆரம்ப முயல்வுகள் .நானும் எதோ என்னால் ஆன சிறு பங்களிப்பை செய்வோம்
  என்று முனைகையில் அதுக்கும் ஊக்குவிப்பு குறைவாகவே தென்படுகிறது .
  அது எங்கள் இயல்பு .நான் முன்னே போவேன் ,எடுத்த அடியை பின் வைக்க மாட்டேன் .

 • vinothiny pathmanathan:

  சங்கர் அண்ணரின் பிரிவு எவ்வளவு பெரிய இழப்பு எம்மவர்களுக்கு என்பது பகி அண்ணரின் கருத்தை வாசித்த போது அறிய முடிந்தது.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  எனது தலைமுறைக்கு சுவாரஸ்யமான தகவல்கள்.
  நன்றி பகி அண்ணை.

Leave a Reply for theepan

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்