உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஸ்பெயின் நாட்டில் கத்தோலிக்க திருச்சபை சார்பில் உலக இளைஞர் திருவிழா 6 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
21ந் திகதி நடக்கும் நிறைவு விழாவில் போப் ஆண்டவர் பெனடிக்ட் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்காக தலைநகர் மாட்ரிட்டில் உள்ள மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போப் ஆண்டவரின் வருகைக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பெயினில் கோடிக்கணக்கில் செலவு செய்து ஆடம்பர திருவிழா நடத்துவது தேவையா? என்றும் திருச்சபைகளின் செயல்பாடுகளை கண்டித்தும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று எதிர்ப்பாளர்கள் ஊர்வலம் சென்ற பாதையில் போப் ஆதரவு யாத்திரிகர்கள் சிலர் ரோட்டோரமாக அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது போராட்டக்காரர் ஒருவர் பாட்டில்களை வீசினார். பதிலுக்கு யாத்திரிகளும் கையில் கிடைத்த பொருட்களை போராட்டக்காரர்கள் மீது வீசி எறிந்தனர்.

பாதுகாப்புக்கு வந்த பொலிசார் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர். மோதலில் இரு தரப்பிலும் சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மோதல் தொடர்பாக போராட்டக்குழுவை சேர்ந்த 6 பேரை பொலிசார் கைது செய்தனர்.

One Response to “ஸ்பெயினில் போப் ஆண்டவரின் வருகைக்கு எதிர்ப்பு:”

  • அற்புதன்:

    போப் ஆண்டவரின் வருகைய கூட அவமதிக்கும் காலமாகிவிட்டது

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்