Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கனடாவின் மேல் ஆர்டிக் பகுதியின் வளைகுடா பகுதியில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்பு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இருப்பினும் விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இந்த விபத்து குறித்து நுனாவட் ஆர்.சி.எம்.பி பொலிசார் கூறுகையில்,”யெல்லோ நைப் பகுதியில் இருந்து ரெசலுட் பகுதிக்கு 15 பயணிகளுடன் பர்ஸ்ட் ஏர் நிறுவன வாடகை விமானம் சென்றது. அப்போது அந்த விமானம் எதிர்பாராமல் நொறுங்கியது” என தெரிவித்தனர்.

விபத்து ஏற்பட்ட போது அதனை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த விமானம் இறுதியாக கனடா நேரம் மதியம் 12.40 மணி அளவில் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. அதன் பின்னர் அதனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

விமான நிலையத்தில் இருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 2 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை உயிர் பிழைத்துள்ளது. அவர்கள் இசா லுயிட்டில் உள்ள பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் ஆழந்த வேதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்