உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்தெற்கு பசிபிக் கடலில் அவுஸ்திரேலியா அருகே வனாது என்ற நாடு உள்ளது. இது 83 தீவுகளை கொண்டது. சுமார் 2 ஆயிரம் கி.மீட்டர் பரப்பளவு உடையது.
இன்று அதிகாலை 3.55 மணியளவில் வனாது தலைநகர் போர்ட்-விலா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் பீதியும் அச்சமும் அடைந்தனர். தங்களது வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

இந்த நிலையில் காலை 5.19 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பல தடவை பூமி அதிர்ந்தது. இதனால் பயத்தில் உறைந்த மக்கள் விடிய விடிய ரோடுகளிலேயே தங்கி இருந்தனர்.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவிலும், 2-வதாக உருவான நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவிலும் பதிவானதாக அமெரிக்க புவியியல் சர்வே மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் போர்ட்-விலாவை மையப்படுத்தி பூமிக்கு அடியில் 40 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வழக்கத்தைவிட கடலில் மிக உயரமான அலைகள் எழுந்தன. இதை தொடர்ந்து சுனாமி ஏற்படும் என மக்கள் பயந்தனர். ஆனால் பசிபிக் சுனாமி மையம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.

இந்த நிலநடுக்கம் போர்ட் விலாவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனால் சில கட்டிடங்கள் இடிந்தன. பெரும்பாலான வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. மொத்தத்தில் சிறிய அளவு சேதம் மட்டுமே ஏற்பட்டதாகவும் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூகம்ப எச்சரிக்கை பகுதியில் வனாது நாடு உள்ளது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது உண்டு. கடந்த ஆண்டு டிசம்பர் 26ந் திகதி இங்கு 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. ஆனால் சேதம் எதுவும் இல்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்