உங்கள் கருத்து
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (6)
- அம்மன் கோவில் (205)
- அரங்க நிகழ்வுகள் (17)
- அறிவித்தல் (35)
- அறிவியல் (63)
- ஆன்மீகம் (21)
- ஆறுமுக வித்தியாலயம் (85)
- இடுமன் கோவில் (86)
- இத்தாலி (28)
- ஊருக்கு உதவுவோம் (19)
- ஊர் காட்சிகள் (31)
- ஐரோப்பிய செய்திகள் (78)
- கனடா (56)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)
- கருத்துக்களம் (43)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (16)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)
- கோவில்கள் (267)
- சங்கர் (15)
- சமைத்துப் பார் (492)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)
- சாந்தை காளிகோவில் (18)
- சாந்தை சனசமூக நிலையம் (31)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)
- சாந்தை பிள்ளையார் கோவில் (103)
- சிந்திப்பவன் (19)
- சுவிஸ் (68)
- சுவீடன் (13)
- செய்திகள் (23,765)
- ஜேர்மனி (71)
- டென்மார்க் (41)
- தினம் ஒரு திருக்குறள் (81)
- திருமணவிழா (43)
- நற்சிந்தனைகள் (18)
- நினைவஞ்சலி (189)
- நெதர்லாந்து (23)
- நோர்வே (60)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (89)
- புதுக்கவிதை (153)
- பூப்புனித நீராட்டு விழா (29)
- பொதறிவுப்போட்டி (7)
- மண்ணின் மைந்தர்கள் (7)
- மரண அறிவித்தல்கள் (189)
- முத்தமிழ் (60)
- எம்மவர் ஆக்கங்கள் (41)
- மெய் (53)
- வர்த்தக விளம்பரம் (39)
- வாரமொரு பெரியவர் (15)
- வாழ்த்துக்கள் (86)
- வினோதமான செய்திகள் (57)
- விரதங்கள் (7)
- வெளியீடுகள் (29)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)
புதிய செய்திகள்
- தொண்டமானாறு அச்சுவேலி பாதையை மேவிய கடல்
- சம்பந்தன் அமெரிக்காவுடன் பேசி பயனில்லை!- லக்ஷமன் யாப்பா
- பிரித்தானிய தம்பதியிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை!
- 5 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட சிறை!
- கொழும்பு துறைமுகநகரம் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்படுகிறது
- சீரற்ற காலநிலையால் வடக்கில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு இரணைமடுவின் 14 வான் கதவுகள் திறப்பு
- பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு
- டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி
செய்திகள் தமிழ்
அண்மையில் எமது ஊரில் அமைந்திருக்கும் காலையடி அ.மி.த.க. பாடசாலை அதிபரை எமது இணையம் சார்பாக திரு.நகுலேஸ்வரன் சந்தித்து உரையாடி இருந்தார். அந்த சந்திப்பில் பாடசாலை அதிபர் பாடசாலையின் இன்றைய நிலமைபற்றி பல விடங்களை எமது இணையம் ஊடாக இந்தப் பாடசாலையின் பழைய மாணவர்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் தனது கடிதம் வடிவில் எழுதி தந்திருந்தார். அந்த கடிதமும் மற்றும் பாடசாலையின் சூழலும் அதன் ஒரு நாள் அன்றாட நிகழ்வுகளையும் ஒளிப்பதிவு செய்து உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.
வணக்கம்
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் பலரும் தாங்கள் வாழ்ந்த மண்ணில் கல்வி பயின்ற பாடசாலையின் பெயரில் பழைய மாணவர்கள் சங்கங்கள் அமைத்து பல நிகழ்ச்சிகள் செயது நிதி திரட்டி தாங்கள் கற்ற பாடசாலைக்கு அனுப்பி வைத்து பாடசாலையில் கட்டிடங்கள் அமைத்து வளர்த்து வருகின்றார்கள். அத்தோடு புதிய வகுப்புக்களையும் ஆரம்பிக்கின்றார்கள். பாடசாலை வசதிகள் அதிகரிக்கும் போது மாணவர்கள் தொகை அதிகரிக்கும். மாணவர் தொகை அதிகரிக்கும் கல்வித்தரம் உயரும் வகையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பாடசாலைகள் ஊரின் அடையாளமாக மாறும் போது தான் சமூக மேம்பாட்டைக் காணலாம். அரசாங்கம் செய்யும்/அரசாங்கம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது எமது ஊரின் குலத் தொழிலுக்கு ஒப்பானது.!!!அரசாங்கம் மக்கள் மேல் அக்கறையோடு செயல்படுகின்றதா? அந்தப் பள்ளி ஆசிரியர் கேட்டது நீங்கள் ஒருமாதம் தேநீர் குடிக்கின்ற பணமும் வருமா? இல்லையென்றால் கோயில் சித்திரத்தேர் கட்ட கொப்பியோட வருவினம் கொடுங்கள்……. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
அரசாங்கத்திடம் கேட்டு அதை எடுத்து கொடுகிறது என்றால் அது அந்த பிள்ளைகளின் பேரன் அல்லது பேத்திக்குதான் கிடைக்கும்.
ஆனால் இந்த பிள்ளைகளுக்கு குடுக்கேனும் என்டால் நாங்கள் தான் குடுக்கேனும்.
நாட்டில பிரச்சனை ஏன் துவங்கினது எண்டு சுரேந்தி அண்ணாவுக்கு தெரியும்ம ? அரசாங்கம் தமிழ் மக்களை சரியாய் கவனிக்காமல் போனதால்தான்.
(நாங்களும் தமிழர் தான்)
எந்த (வளர்ச்சியடைந்த) நாட்டிலும் அரசாங்கம் தானாக வந்து உங்கள் பிரச்னையை ஆராய்ந்து தகுந்த உதவியை புரியாது. அதற்கென்று முயற்சி எடுத்து தகுந்த முறையில் கோரி, பெற்றுக்கொள்ளவேண்டும்.
நீங்கள் வாழும் நாட்டில் சோம்பேறித்தனமாக வீட்டில் இருந்தால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய வரித்தொகையை அரசாங்கமே உங்களுக்காக கணக்கு பார்த்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை அரசாங்கம் தானாகவே உங்கள் வங்கி இலக்கத்த்க்கு அனுப்பிவிடுகிறதா?
வேறு உதாரணம்: குஞ்சங்கலட்டியில்(ஓம் அங்கதான்) இன்று ஒரு குடிசை வீடு இல்லை – எல்லாம் கல்வீடுகள் அங்கும அரசாங்கத்தின் உதவிகள் சரியான முறையில் கோரப்பட்டு, குறுகிய காலத்தில் கிடைக்கப்பெற்றது. குடிசை கிராமம் கல்வீட்டு கிராமமாக்கப்பட்டது.
எமது ஊரில் கணிசமான பெரியவர்கள் பலர் இருக்கிறார்காள், அவர்களின் பராக்குகள் எல்லாம் ???????
உமது கருத்து என்னவென்றால் பெரியவர்கள் இல்லாத குஞ்சம் கலட்டியில் அரசாங்கம் உதவி செய்தது எண்களிடம் பெரியவர்கள் இருக்கிறார்கள் அரசாங்கம் உதவி செய்ய வருதில்லை
நல்ல வேளை, லிஸ்டில பிரம்பு இல்லை. இன்னுமா பிள்ளைகளை அடிச்சு உதைச்சு சித்திரவதை செய்யிறியள். அடிக்கிறதாலை எந்த அறிவும் வளராது. அடி விழப் போகுது என்ற பயத்தில தெரிஞ்சதும் வாயில வராது.
இந்த படங்களைப்பார்க்கும் போது திரும்பவும் ஒருக்கா பள்ளிக்கூடம் போகவேணும் மாதிரிக்கிடக்கிறது பாடசாலை நல்லவளர்ச்சி அடைந்து இருக்கிறது பாடசாலை முழுவதும் நிறைய மாறிப்போச்சு வெள்ளை சட்டை நீல காச்சட்டை அதுக்கும் மேல்லை tai தெரிஞ்ச ஆசிரியர் கலர் கலராய் பூக்கண்டு கொள்ளை அழகாக இருக்கிறது பாடசாலை மாணவர் தொகை மிகவும் குறைவகுள்ளது
எனக்கு ஒரு கேள்வி இப் பாடசாலை அரசாங்கத்தின் பாடசாலையா ??? இல்லை எம் ஊர் மக்களின் அல்லது ஒரு தனி நபர் நடாத்தும் பாடசாலையா??? அரசாங்கத்தில் இருந்து பெற வேண்டிய எல்லா உதவிகளையும் எம் ஊரு மக்களிடம் இருந்து பெற்றால் ,, நாளைக்கு அரசாங்கத்தின் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் அனைத்தும், கிடைக்காமலே போய்விடும்!!! அரசாங்க உதவிகளையும் நம்பி இப் பாடசாலையில் சில மாணவ மாணவிகள் படித்து வருகின்றன தயவு செய்து அதை கெடுத்து விட வேண்டாம்!!!! நகுல் தம்பிக்கு சரியாக விளங்கவில்லை போல அரசாங்க சொத்துகளில் தேவை இல்லாமல் நாங்கள் தையிடக்கூடாது என்று !!! நன்றி வணக்கம்
அரசாங்கப்பள்ளியில் கொப்பி, பென்சில், அழி உதவிகள் அரசாங்கத்தால் செய்யப்பட்டது நான் அறிந்தவரை இல்லை.
புத்தகங்கள், கிணறு மூடுவது, வெள்ளை/பூச்சு பூசுவது & மண் நிரப்புவது விடயங்கள் நீங்கள் கூறுவது போல் வெளி நாட்டில் உள்ள ஊரவர்கள் செய்தால் அரசாங்கத்திற்கு தன் கடமை என்னவென்று தெரியாமல் போய்விடும் – ஒத்துக்கொள்கிறேன்.
இவற்றை அரசாங்கத்திடம் இருந்து தகுந்த முறையில் கோரி, அவற்றை பெற்று நெறிப்படுத்துவதற்கு தானே ஊருக்குள் பல பெரியவர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்தேன்.
அதில யாரோ பெரியவர் ஒருவர் சூரசன்காரன் என்பவர் இருக்கிறாராம் ஊருக்கு bus ஐ கொண்டந்தாராம், கரண்டை கொண்டந்தாராம், காலையடி பள்ளிக்கூட நீண்ட கால தேவையை அரசாங்கத்திடம் இருந்து முறைப்படி கிடைக்க பெறுவதற்கு இந்த பெரியவர் முன் வர மாட்டார் என்று நினைக்கிறீர்களா?
அரசாங்கத்துறையோடு தொடர்பை பேணும ஊர் பெரியவர்கள் இவற்றை செய்யாமல் வேறு ஏதாவது அவர்கள் செய்து கொண்டிருப்பார்கள் என்று நான் நம்பவில்லை.
சுதர்சன் honesty is best policy .i always appreciate u .goahead with lot of courages .
நன்றி. எழுத்துருவத்தில் மட்டும்தான் இதை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும்.
There are a lot of unemployed naaddaamais walkin around in our villages without any single drop of proper aim….
Creating barriers is the(ir) major aim – so extremely hard to apply (y)our honesty & humanity as they remain heros with zero thoughts…
மேலான் எல்லாரும் விளங்க எழுதவில்லை….விளங்கவேண்டியவர்களுக்கு மட்டும் விசேஷமாக.
admin ற்கு நன்றி அனுமதித்ததற்கு.
85 கொப்பிகள் X Rs20 = Rs1,700 = €11 | C$15 | £9 | DKK80 | CHF12.
நான் கடைசியாக Hamm கோவிலில் செய்த அரிச்சனைத்தட்டின் விலை = €20 | Rs3,000 | C$28 | £18 | DKK150 | CHF23.
அரிச்சனை செய்தபின்னும் அதேமாதிரிதான் இருக்கிறன், ஒரு முன்னேற்றத்தையும் காணம்.
எனக்கு கடைசியாக காரில் வேகமாக ஓடி வந்து, வாயை பொத்திக்கொண்டே கட்டின அபராதம் = €82 | Rs12,995 | C$117 | £73 | DKK610 | CHF95.
அரிச்சனை செய்தும் அபராதம் வந்தது தான் இன்னும் விளங்கேல…
இங்க கருத்து எழுதினால் என்னட்டையும் பள்ளிக்கூடத்துக்கு காசு கேட்டு போடுவினம். சரி சரி எல்லாத்தையும் நல்ல பிள்ளையள் மாதிரி ஒளிச்சிருந்து வாசிப்போம்.
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
நாங்கள் படித்த பள்ளியின் அழகு
ஞாபகம் வருதே
பள்ளியில் பாலுக்கு வரிசையில்
நின்றது ஞாபகம் வருதே
முற்றத்து மாவும் முட்கம்பி வேலியும்
ஞாபகம் வருதே. ஞாபகம் வருதே
வாத்தியார் பிரம்பும் ஞாபகம் வருதே
எங்கள் ஆரம்பப்பள்ளியை கண்முன்கொண்டு வந்த இணையத்திற்கு நன்றி.
எமது பழய மாணவர்கள் பாடசாலையின் தேவைகளை நிறைவு செய்வார்கள்