உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இன்றைய அவசர உலகில் பெருகிவரும் பரபரப்பு, பதட்டம் அதனால் ஏற்படும் மனக்கவலைகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவை எல்லாம் அதிகமான மனபாரத்தை ஏற்படுத்தி ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றன. அப்படி ஏற்படும் மன இறுக்கத்தை தளர்த்தி மன அமைதி பெறும் வழிகளை இங்கே பார்ப்போம்.

முதலாவதாக உடல் மற்றும் உள்ளத்தை தளர்த்தி ஆழமாக சுவாசிக்க வேண்டும். மூச்சை உள்வாங்கி, பின்னர் மெதுவாக வெளியிடுவதும் முக்கியமானது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மனதையும், உடலையும் தளர்த்தி ஓய்வு எடுப்பது அவசியம்.

அதேபோல் நாம் எப்போதும் செய்யும் வேலையை விட்டுவிட்டு, மாறுபட்ட நமக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு வேலையை செய்வதும், அல்லது அதைப்பற்றி தெரிந்து கொள்வதும் மனதை நிம்மதியாக்கும். தோட்ட வேலை செய்தல், புத்தகம் அல்லது பத்திரிகை வாசித்தல், விளையாடுதல் ஆகியவற்றை பொழுது போக்காக செய்தால் உடல் புத்துணர்வாகி, மனம் அமைதி பெறும்.

தினமும் குறிப்பிட்ட நேரம் யோகாசனம் செய்தால் ரத்த அழுத்தம் குறைந்து, மன அழுத்தமும் குறைகிறது. ஆனால் யோகாசனம் செய்பவர்களுக்கு எவ்வித கெட்டப் பழக்கமும் இருக்கக் கூடாது.

மதுவகைகள், புகை பிடித்தல், புகையிலை பழக்கம் ஆகியவற்றை தொடவே கூடாது. அதேபோல் உணவு முறையில் கட்டப்பாடு இருந்தால் மட்டுமே ரத்த அழுத்தம் சீராகும்.

யோகாசனம் செய்வதற்கு முன்பு, மனதில் அச்சம், பீதி, படபடப்பு, மன இறுக்கம் போன்றவை மனதுக்குள் வைத்திருக்கக் கூடாது. யோகாசனத்தை காலையில் செய்வது அவசியம். அப்படி தொடர்ந்து யோகாசனம் செய்து வந்தால் கண்டிப்பாக மனம் நிம்மதி அடையும்.

3 Responses to “மனம் அமைதி பெற:”

 • selvam:

  யோகா ஒரு அருமையான பயிற்சி கண்டிப்பாக மன அமைதி உடல் ஆரோக்கியம் கிடைக்கும் எனது அனுபவம்

 • அற்புதன்:

  இந்த இணயத்தளம் வரும்முன் இதில் குறிப்பிட்டதுபோல் மன அழுத்தம் போன்ற பல வியாதிகள் வந்திருக்கலாம் ஆனால் இப்போ அவையெல்லாம் அடியோடு தூக்கிஎறிந்துவிட்டேன் என்ற மன நின்மதியும் சந்தோசமும் எம்மவரின் இணயத்தளங்களில் வரும் அனைத்தையும் பார்த்தாலே எந்தொரு கொடிய நோயும் எங்களை அண்டாது எப்பவடா வேலை முடிந்து வீட்டை வந்து இந்த பெட்டியை துறப்பேன் என்று இருக்கைஇல் யாருக்கு மன அழுத்தம் வரும் ?

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  முன்பு, மனதில் அச்சம், பீதி, படபடப்பு, மன இறுக்கம் இவை இருப்பவர்கள் தான் தமிழர்.
  இருக்கையில் தமிழருக்கு யோகாசனம் சரிவராது – எங்களுக்கென்று நாடகாசனம், விடுப்பாசனம், இடிச்சலாசனம் என்று பலது உள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்