உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


1/ பதில்கள் அளிக்க வேண்டிய காலக்கெடு எதிர்வரும் ஞாயிறு, 4ம் திகதி செப்டம்பர், பணிப்புல நேரம் 23:59 வரை.
இதன்பின் சமர்ப்பிக்கப்படும் (சரியான) பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
2/ நாடு கடந்த, வயது, பால் கடந்த அவைவருக்குமான திறந்த போட்டி. 4 பதில்களையும் ஒரே சமயத்தில் சமப்பிப்பவர்களுக்கே வெற்றி.
3/ விதண்டாவாத கேள்விகளுக்கு பதிலளிக்கப்படமாட்டாது. மேல் தரப்பட்ட தகவலிற்கு புறம்பாக எதுவும் மீறி தரப்படமாட்டாது.

36 Responses to “பொது அறிவு போட்டி”

 • சொல்ல மறந்த இன்னொரு விடயம் மானிப்பாய் மருத்துவ கல்லூரி தொடராமல் போனதற்கான காரணங்கள் .அப்போ இருந்த மிசனரி மாருக்கு
  எதிரான எதிர்ப்பலைகள் .மற்றும் ஆயுர்வேத பரியாரிமாரின் எதிப்புக்களுமே அது தடைப்பட்டது.மீண்டும் அடுத்த போட்டியொன்றில் சந்திப்போம்.வெகு
  விரைவில் .அதில் கேள்விகள் இலகுவானதும் பல்துறை சார்ந்தும் இருக்கும் .சினிமா ,வரலாறு ,அறிவியல் ,சமகால விவகாரங்கள் அடங்கும் .
  மற்றும் என் Depression பற்றிய நீண்ட கட்டுரை அயல் வீட்டு இணைய தளத்தில் வெகு விரைவில் எதிபாருங்கள் .இம்முறை போட்டியில் ஆதரவு
  வழங்கிய சந்திரகாசன் தீபன் ,சுதர்சன் ஆகியோருக்கு மனப்பூர்வ நன்றிகள் .
  வணக்கம் மீண்டும் சந்திப்போம்

 • பொருட்களை உற்பத்தி பண்ணுகிறோம் .இதற்கு மேலும் தகவல்கள் எவருக்காவது தேவை எனில் உங்கள் மின் அஞ்சல் முகவரியை தந்தால் எது வித கட்டணமும் இன்றி ஓசியில் அனுப்பி வைக்கப்படும் .உந்த தகவல்கள் இனைய தளத்திலோ ,சஞ்சிகைகளிலோ சேகரிக்க பட்டதல்ல .மாறாக நான் பள்ளியில் கற்ற இரசாயனவியல் ,மற்றும்
  Refineryஇல் பணி புரிந்து பெற்ற அனுபவம் ஆகியவற்றின் கூட்டு .ஞான் பெற்ற அறிவு அனுபவம் என்பவற்றை அடுத்தவருடன்
  பகிர்தலே என் நோக்கு .இணையத்தார் மன்னிக்கவும் .விட்டு விட்டு
  வருவதற்கு .என் நிலையை புயுங்கள் கீலில் இருந்து மேலாக போட்டியல் என்றால் வாசிக்க இலகுவாகும் .சிரமத்துக்கு மன்னிக்கவும் .நன்றிகள் பல

 • உந்த chemical naphtha thaan யூரியா ,மற்றும் எண்ணற்ற ,நீங்கள் இன்று அன்றாட வாழ்வில் பாவிக்கும் ,ஏன் உடுக்கின்ற உடு புடவையில் இருந்து
  அனைத்து சிந்தெடிக் சாதனங்கள் ,பிளாஸ்டிக் ,polythene ,nylon சொன்னால்
  முடியாது .விடிஞ்சு போம் .அனைத்துக்கும் மூல பொருள் இந்த chemical naphtha வே. இதில் உள்ள காபன் .ஐதரன் என்பவற்றின் கட்டமைப்பில்
  polymaraisation (பல்பகுதியாகம் ) என்ற process இனால் மாற்றி அமைப்பதன்
  மூலம் emakku தேவை

 • தீபன் நான் இன்னும் subject ஐ முடிக்கவில்லை .type பண்ணிக்கொண்டு இருக்கையில் வேலை விடயமாக என்னை கூபிடுவான்கள் .விட்டு விட்டு
  ஓடி போய் திரும்பிவந்து பார்கையில் ஒண்டும் இருக்காது .தொலை பேசி சமிக்ஞை குறை பாடு .அதனாலேயே கொட்டும் மழை போல் கொட்டாது
  விட்டு விட்டு பெய்யிற மழை மாதிரி .சரி விடயத்துக்கு வருவோம் .மேலே
  (கீழே ) சொன்ன naphtha ஆனது இலகு /பார (light & heavy ) naphtha ஆக வெளி
  வரும் .இது இரண்டையும் சேர்க்கும் போது blending component என அழைக்கப்படும் .இதிலுள்ள கந்தகம் நீக்கப்பட்டு (உங்கள் என்ஜின் களுக்கு
  பெரிய பிரச்சனைகளை கொடுக்கும் என்பதால் ).பின் octane numper பெறுமதியை கூட்டுவதற்காக TEL blending என்னும் ஒரு அலுவலும் நடந்த பின் நீனகள் கார்களுக்கு ஊத்துகிற பெட்ரோல் சந்தையில் .மேல் சொன்ன
  இரண்டு அலுவல் களும் செய்யாத விடத்துக்கு அதை chemical naphtha
  என்று அழைக்கிறோம் .

 • நிலத்தடி மற்றும் கடலடியில் தோண்டி எடுக்க படும் மசகு எண்ணெய் ஆனது பாரிய பகுப்பகங்களில் (oil Refinery ) காச்சி வடிகட்டல் (distillation –
  கசிப்பு வடிப்பதுக்கு சமனான ) முறையில் பல்வேறு உற்பத்திகள் (finished final products ) பெறப்படுகிறது .உலையில் பாரம்குறைந்த (லைட் gases ) மேல் நோக்கி செல்கையில் அவை வெளியே எடுக்கப்பட்டு திரவ நிலைக்கு மாற்றப்பட்டு நீங்கள் கருக்கலுக்கு பாவிக்கும் சமையல் gas (LPG ).அதுக்கு
  அடுத்து density (அடர்த்தி ) கொதிநிலை என்பவற்றின் அடிப்படையில் naphtha ,
  kerosine ,டீஸல்,உலை எண்ணெய் (furnace oil ),பின் அடியில் மண்டி (residu )
  மண்டியில் இருந்து தார் .மேலே கூறப்பட்டது மிக சுருக்கமான எளிய விளக்கமே .மேல் சொன்ன item களிலிருந்து ஆய்ரகனக்கான் உற்பத்தி பொருட்கள் பல்வேறு Process மூலம் உற்பத்தி பண்ண படும் .

 • ஞாயிறு 2359 மணி போட்டியின் முடிவு நேரம் .உடன் வர முடியவில்ல்லை .இணையத்துடனான தொடர்பு துண்டிக்க பட்டுவிட்டது .மன்னிக்கவும் .ஒரே ஒரு போட்டியாளர் .மட்டுமே .
  எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்து இருந்தார் .பாராட்டுக்கள் .இருந்தும்
  யூரியா கேள்விக்கான பதில் 1 /4 வாசியே ஏற்றுக்கொள்ள கூடியது .வளிமண்டலத்தில் உள்ள நைதரசனும் சம்பத்தப்படுகிறது சரியே .
  இருந்தும் முக்கிய மூல பொருள் ஆனது நீங்கள் வாகனங்களுக்கு விடும்
  பெட்ரோலே .என்ன நம்ப மறுக்கிறீர்கள் போல ?.அதுதான் உண்மை .பெற்றோலிய உற்பத்தியில் கடலுக்கு அடியிலும் ,நிலத்துக்கு அடியிலும் தோண்டி எடுக்கப்படும் மசகு எண்ணெய் பகுப்பகங்களில் (oil
  refinery ) காச்சி வடிகட்டல் (distilation -சரியாக கசிப்பு வடிக்கிரத்தை போன்று )
  மூலம் பல உற்பத்தி பொருட்கள் (final finished products ) பெறப்படும்.

  • theepan:

   சரி விடுங்கோ காசு தப்பிச்சுது . எங்கட ஆக்களை நம்பி, நீங்கள் ஐம்பதாயிரம் பரிசு எண்டு கூட அறிவிக்கலாம், ஒரு பிரச்சினையுமில்லை. பரிசுக்கு ஒரு கேடும் வராது. ஆனால் உங்களிடம் இருந்து மேலும் மேலும் இவ்வாறான தரமான கேள்விகளை எதிர்பார்க்கிறோம்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   யூரியாவுக்குள் நைதரசனுடன், பொட்டாசியம் உட்பட ‘பொஸ்பரஸ்’ என்ற இரசாயனமும் இருக்கின்றது. நீங்கள் தேடிய பதில் பொஸ்பரஸ் என்பதை நினைத்தேன்.
   நான் பணிபுரியும் நிறுவனமும் உரம் (fertilizer) உற்பத்தி செய்கின்றது, Fertilizer பிரிவில் பணிபுரிபவர்களிடம் வினவினால் பொஸ்பரஸும் இருக்கிறது என்று (tp) அடித்து சொல்கிறார்கள்.
   என் குழப்பத்தை தீர்க்கவும்.

   • ஒருவர் மட்டுமே நான்கு கேள்விகளுக்கும் பதிலளித்திருந்ததை பார்த்து சோர்வுற்று இருந்த எனக்கு சுதர்சனின் கேள்வி மீண்டு ஒரு புத்துணர்வை
    தந்தது .நான் அறிந்த வரை யூயா வில் அடங்கி இருப்பது காபன் ,ஐதரசன் ,நைதரசன் மட்டுமே .மேலே விளக்கி உள்ளேன் .பொஸ்பரசு வேறாக பொஸ்பேட் என்ற பெயரில் இரு வழிகளில் தயாரிக்கப்படுகிறது .ஒன்று இறைச்சிக்காக அறுக்கப்படும் விளங்குகளின்

    எலும்புகளிலிருந்து .மற்றது இயற்கையாக நிலத்தில் உள்ள posphate படிமங்களிலிருந்து.செயற்கை பசலைகளினால் சூழல் மாசடைவதனால்
    நவீன முறையில் பொசுபரசியும் சேர்கிறார்களோ நானறியேன் .இடை நிலை பணியாளர்களிடம் அல்லாது விடம் அறிந்த நபர் களிடம் கேட்பது நன்று .
    எனக்கு அப்படி பல அனுபவங்கள் .ஆர்வமிகுதியால் போற பல இடங்களில் பல கேள்விகளை கேட்டால் .தலை கீழான பதில்கள் .திருப்தியற்று
    பின் உரியவர்களிடம் விசாரிக்குமிடத்து சரியான பதில்கள் கிடைத்து
    அநேக சந்தர்ப்பங்களில் .எதுக்கும் ஆர்வத்தை இட்டு வலு புளுகம் .யூரியா
    தாவர வரர்ச்சிக்கு மட்டுமே .ஒவ்வொரு தேவைகளுக்கும் வெவ்வேறு உரங்கள் .அமோனியா அதில் ஒன்று .அங்கு நைதரசனும் ஐதரசனும் .

 • எனக்கு ஆரேனும் எங்கடை ஊர் வயது போன ரண்டு மூண்டு பெண்டுகளோடை கட்டி பிடிச்சு ஒப்பாரி வைச்சு அழவேணும் போல
  தோன்றுகிறது .எவ்வளவோ கைற்றப்பட்டு கேள்விகள் அதுக்கான விளக்கங்கள் உடன் கொஞ்ச காசையும் (எனக்கெண்டா அது பெரிய தொகை ) ஒரு போட்டியை வைச்சா கை விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே
  பங்கு கொண்டுள்ளனர் .அடியடா படலையிலை எண்ட மாதிரி இப்ப ஒரு ஐடியா வந்துவிட்டது .அடுத்த போட்டி நமீதாவின் பேரன் பீட்டி பேர் என்ன ?
  திரிஷா ஆந்திராவில் தன தகப்பனின் பிறந்த நாளுக்காக கட்டி பரிசளித்த
  ஹோட்டலின் பெயர் என்ன ?.எம்மூரில் நாம் அடுத்து எழுப்பவுள்ள கோபுரம்
  இலுப்பை மரத்தடியா அன்றில் வேப்பமரத்தடியா ?.இது போன்ற கேள்விக்கணை களை தொடுத்தால் சனம் முண்டி அடுச்சுக்கொண்டு பங்கு
  பற்றும் .வாழ்க எம் சமுதாயம் .

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நானும் வாறன் கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வைக்க.
   உது பறவாயில்லை…. நான் விசரன் பதில்களை பிரசுரிக்கும் பொழுது ஊரவர் கொஞ்சம் கூடிய தகவல்களை அறிந்து கொண்டு பொது விடயங்களில் நாட்டம் உண்டாகி, பகுத்தறியும் தன்மை வந்து தமது வாழ்க்கையில் வளர உதவும் என்று சொல்லி நேரங்கள் ஒதுக்கி தகவல்களை சேகரித்து அவற்றின் உண்மைத்தனங்களை ஆராய்ந்து தெரிந்தவர்கள், அறிஜர்கள் மூலம் ஊர்ஜிதப்படுத்தி பின்னர் அவற்றை வடிவமைத்து (எனது weak point வடிவைம்மது) கட்டுரைமாதிரி எழுதிய பின்னரும் ஒரு பத்து பதினைந்து பேர்களே பார்க்கிறார்கள் ஆர்வம் கொள்கிறார்கள் என்றவுடன் உந்த நேரத்துக்கு வீட்டு கக்கூசை கழுவி என் நேரத்தை பிரயோசனப்படுத்தியிருக்கலாம் என்ற மனநிலைக்கு நான் வந்து இப்ப கொஞ்சம் மாதங்கள் ஆகிவிட்டது.
   நீங்கள் திறமைசாலி என்ன முதலாவது கேள்வியிலேயே அதை உணர்ந்து விட்டீங்கள்.
   நமீதாவைப்பற்றிய கேள்விகள் என்றால் பலர் சாப்பிடாமல் இருந்து பதில்களை தேடி போட்டியில் கலந்து கொள்ளவருவார்கள்.
   இல்லாவிட்டால் பூ நூல் கட்டிப்போட்டு ஒரு சாமி படத்தோடு கேள்வியை பிரசுரித்து இந்த கேள்விக்கு பதில் அளிப்பதற்கு குறைந்தது 20 பேரை சேர்த்து வாருங்கள் இல்லாவிட்டால் 3 நாட்களில் உங்கள் மண்டையால் புளு வரும், உங்களுக்கு குடும்பம் குலையும் என்றெல்லாம் பம்மாத்து முறையில் கேள்விகளை கோர்த்தால் computer இல் நாட்டம் இல்லாதவர்களே கலந்து கொள்வார்கள். பக்கத்தில இருக்கிற internet cafe யில் சென்று கூட போட்டியில் கலந்து கொள்வார்கள்.

   ஊர் இணையங்களில் கலியான/பிறந்தநாள்/சாமத்திய வீட்டு படங்களும், கோவில் படங்களும், புலம்பெயர் ஒன்று கூடல் படங்களும் வந்தால் மட்டும் போதும் என்ற போக்கில் இருந்தோம் என்றால் டொர் எல்லாம் வளர்ச்சியில் எங்களை விட்டு overtake பண்ணி கண்காணாத இடத்தில் வந்துவிடுவார்கள். ஏற்கனவே சில விடயத்தில் வந்துவிட்டார்கள்.

  • theepan:

   பொட்டில அடிச்சாப் போல சொல்லியிரிக்கிரியல். உதைத்தான் நானும் ஒரு கட்டுரைக்கு கருத்தா எழுதியிருந்தனான். பிள்ளைகள் மட்டும் படி படி எண்டு படிச்சு டாக்குத்தரா,என்ஜினியரா வர வேணும். ஆனா நாங்க மட்டும் நயன் தாரா நனைஞ்சதா , மங்காத்தா மண் கவ்வினதா ,இதுகளை மட்டும் தான் வாசிப்போம், எண்டு.

  • theepan:

   முந்தின காலத்தில, படிக்கேக்க சந்தேகம் வந்தா, லைப்ரரிக்கு போய், உள்ள புத்தகம் எல்லாம் தடவினாலும்,சில நேரம் பதில் கிடைக்காது. ஆனால் இப்பவெல்லாம் இன்டெர்நெட்டில என்ன வேணுமோ உடனே அறிஞ்சு கொள்ளலாம். இருந்தும் வருந்தத் தக்க விஷயம் ,யாருக்கும் ஆர்வமில்லை.

  • எங்கட நமிதாவைப்பற்றியா கேள்வி கேட்கப் போகிறீர்கள்?சீக்கிரமாக இந்தப் போட்டியைத் துவங்குங்கோ சார்.
   என் அம்மா எனக்கு வைத்த புனைப்பெயர் குறுக்கால போவான்.அது பிடிக்காமல் நான் கலட்டி சுள்ளானாக வலம் வருகின்றோன்.

 • theepan:

  இன்றைய சூழலில் இரு வகை நோயாளர்கள் காணப்படுகின்றனர்.
  1 ) HIV positive – நோய் தோற்றிய இரு வாரங்களுள் ELISA மற்றும் Western blot எனும் இரத்த சோதனைகள் மூலம் கண்டறியலாம்
  2 ) AIDS நோய்- இது அண்ணளவாக 5 – 10 வருடங்களில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ( CD 4 < 200 ) நோய் முற்றிய நிலை.

  HIV Positive நோயாளிகள் தொடர்ந்து Anti Retroviral மருந்துகளை உட்கொள்வதன் மூலம் AIDS ஐ தவிர்க்கலாம்.
  ஆதலால் தான் தற்போது AIDS நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

  மேலும் HIV Positive ஆன பெண்கள் கர்ப்பம் தரித்து, நோயற்ற ஆரோக்கியமான குழந்தைகளை பிரசவிக்க முடியும். கர்ப்ப காலத்தில் தொடர்ந்து Anti Retroviral மாத்திரைகளை பாவித்தால் இது சாத்தியமாகும். ஆனால் இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்ட முடியாது.

  நோய் முற்றிய AIDS நோயாளர்கள் அவர்களுக்கு உண்டாகும் தொற்று நோய்களுக்கு உரிய Antibiotic எடுப்பதன் மூலம் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளலாம்.

 • வினாக்களும் விடைகளும் தொடரட்டும். கற்றுக்கொள்வோம். அனைவருக்கும் நன்றி.

 • Sivakumar Aninthika:

  (1). நானோ தொழில்நுட்பம் என்பது 1 -100 நானோ மீட்டர் அளவிலான பொருளின் இயல்புகளை அறிந்து கட்டுப்படுத்தி, அதன் தனிச்சிறப்பால் நிகழும் புது விளைவுகளின் அடிப்படையில் புது பயன்பாடுகளுக்கு வழி வகுப்பதாகும். ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் ஒரு மில்லியனில் ஒரு பங்கு ஆகும்.

  (2) Anquired Immune Deficiency Syndrome

  (3) யூரியாவின் மூலப்பொருள் எளிய நைட்ரசன் ஆகும்

  (4) மானிப்பாயில் உள்ள கலாநிதி கிறீன் மெமோறியல் வைத்தியசாலையானது இலங்கையின் முதலாவது வைத்தியக் கல்லூரி ஆகும்

  • சிவகுமார் அனிந்திகாவுக்கு எனது பாராட்டுக்கள் . .நைதரசன் கூட சம்பந்தபடுகிறது .இருந்தும் சரியான பதில் அதுவல்ல பிள்ளை .
   போட்டியின் முடிவில் பரிபூரண விளக்கங்கள் கிடைக்கும் .எல்லா கேள்விகளுக்கும் சுருக்கமான பதில்களை எதிப்ர்பார்த்தபோதும் கேள்வி 1
   இக்கு சந்திரகாசன் அதி அற்புதமான விரிவான விளக்கத்தை தந்துள்ளார் .நன்றிகள் பல .இருந்தும் ஒவ்வொரு கேள்விகளுக்கும்
   தனித்தனியாக பதில் அளிக்கும் போது

   போட்டியின் நிபந்தனைகளில்
   இருந்து விலகி சென்று எல்லா கேள்விகளுக்கும் பதில் அழிப்பவர்களை
   குழப்பிவிடும் .எதுக்கும் உங்களின் ஆர்வத்துக்கு நன்றிகள் பல . சந்திரகாசநினின் பதிலில் நான் சேர்க்கவேண்டிய ஒரு முக்கிய விடயம் ஒன்று உள்ளது .சகல துறைகளிலும் இந்த தொழில்நுட்பம் ஆட்சி செலுத்துகின்ற போதும் முக்கியமாக மனித வாழ்வில்
   வைத்திய துறையில் கற்பனை கூட பண்ண முடியாத அளவு கணிய
   உபகரணங்கள் மருந்துகள் போன்றவற்றை எம் உடலில் செலுத்துவதற்கான
   சாத்தியங்கள் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் எங்களுக்கு வழங்கப்போகின்றது .

 • CHANDRAHASAN:

  நானோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவாக அமையும்பொழுது சிறப்பாக வெளிப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், அப்பொருட்பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது.

  ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில், 10-9) ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களே அமர முடியும். பொதுவாக ஒரு மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது. புகையிலைப் புகையின் மிகச்சிறிய துணுக்கு 10 நானோமீட்டர் [1]

  நானோ தொழில் நுட்பம் என்பது உண்மையிலேயே பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்திவரும் ஒரு நுட்பம் ஆகையால் நானோ தொழல்நுட்பங்கள் (நானோ நுட்பியல்கள்) என்று பன்மையில் அழைக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் நானோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் செய்து வருகின்றது. அமெரிக்காவின் நேசனல் நானோ டெக்னாலச்சி இனிசியேட்டிவ் (National Nanotechnology Initiative) (நாட்டின் நானோ தொழில்நுட்ப முன்னூட்டு) என்பது நானோ தொழிநுட்பத்தைக் கீழ்க்காணுமாறு வரையறை செய்கின்றது. “Nanotechnology is the understanding and control of matter at dimensions of roughly 1 to 100 nanometers, where unique phenomena enable novel applications.” நானோ தொழில்நுட்பம் என்பது 1-100 நானோ மீட்டர் அளவிலான பொருளின் இயல்புகளை அறிந்து கட்டுப்படுத்தி, அதன் தனிச்சிறப்பால் நிகழும் புது விளைவுகளின் அடிப்படையில் புது பயன்பாடுகளுக்கு வழி வகுப்பதாகும்.

  கருவிகளை சிறிதாக்கிக்கொண்டே போவதின் விளைவாக அணுப் புறவிசை நுண்ணோக்கி (atomic force microscope (AFM)) மற்றும் வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM)) போன்ற மிகுதுல்லிய நுண்கருவிகள் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.

  • theepan:

   நல்ல இலகுவான விளக்கம்.நன்றிகள்.
   நீங்கள் அழ.ச வா அல்லது செல்.ச வா.

 • theepan:

  4 ) மானிப்பாய் green memorial hospital தான் தென்கிழக்காசியாவிலேயே முதலாவது மருத்துவக் கல்லூரி. sir .Samuel Fisk Green என்பவரால் 1848 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. தனது 30 வருட சேவைக் காலத்தில் 60 மருத்துவர்களை அவர் உருவாக்கினார். யாழ் மறைமாவட்ட தென் இந்திய திருச் சபையால் நிர்வகிக்கப்பட்ட இம்மருத்துவமனை தற்போது மட்டுப் படுத்தப் பட்ட அளவிலேயே இயங்குகின்றது..
  ஏதோ ஆர்வக் கோளாறால் எழுதி விட்டேன். ஏனைய விடயங்களை மற்றவர்கள் கண்டு பிடிக்கட்டும்.
  நன்றி

  • எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்தும் போட்டியில் இருந்து விலகி
   இளைஞர்களுக்காக விட்டுக்கொடுப்பதாக அறிவித்திருறின்தீர்கள். அதை பாராட்டி நான் ஒரு கருத்தை தெருவித்திருந்தேன் .எதோ காரணத்துக்காக
   அட்மின் அதை வெட்டிவிட்டார்கள் .நான் அறியேன் .tnxs 2 அட்மின் .

   • theepan:

    நன்றி.
    எடுத்தவுடன் எல்லாவற்றுக்கும் பதிலை எழுதி விட்டால், போட்டி சுவாரசியமின்றி போய்விடும் என்பதால் தான், மற்றவர்கள் பதில் எழுதும் போது அதற்குரிய விளக்கத்தை எழுதுகிறேன். இதன் மூலம் ஆர்வமுள்ள ஒரு ஐந்தாறு பேர்களாவது பயனடைவார்கள் என்றால் நான் மட்டட்ட மகிழ்வடைவேன்.

    நானோ தொழில்நுட்பம் பற்றி சந்திரகாசன் அவர்கள் அருமையான விளக்கத்தை தந்திருந்தார்.அதனால் அதில் நான் மூக்கை நுழைக்கவில்லை. ஒரே ஒரு விடயம்,நனோவைப் பற்றி – தற்போது, cancer க்கும் ,AIDS க்குமுமான மருந்துகள் ,நானோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன.
    இன்னும் ஒரே ஒரு கேள்வி மிச்சமுள்ளது. பார்ப்போம்.

   • தீபன் உங்களின் அறிவு ஆற்றலை மெச்சுகின்ற அதே வேளை ஆர்வமிகுதியால் போட்டியின் சுவாரிசியத்தை குழப்பி போட்டீர்கள் .நான்
    குறை கூறவில்லை .சுத்தசன் அண்ணை சொன்னார் தான் ஒரு 20 வரியமாவது ஊரிலை சீவிச்சு இருக்கவேணுமெண்டு .இன்றேல் தனது வயது
    ஒரு எழுவதாவது இருக்கவேணுமெண்டு .நாங்கள் இருவரும் உந்த
    கணக்குக்கு வெளியிலை தானே .to aquire knowledge age or your living era is not a
    barrier .

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  அருமையான கேள்விகள். இவை கடந்த காலங்களை (சுமார் 80 வருடங்களை) பிரதிபலித்தாலும், எதிர்காலத்தையும் எதிர்காலத்தை ஆக்கிரமிக்க போகும் தொழில்நுட்பத்தையும் உள்கொண்டுள்ளது சிறப்பே, இதை ஆக்கியவரும் திறமைசாலி என்பதை இந்த வினாக்கள் மறைமுகமாக உணர்த்துகிறது. இனி எமது ஊரவர்கள் முட்டாள்கள் என்று யாராவது சொல்லட்டும் உலக்கையால மண்டையில போடுறன்.

  1. நானோ என்ற தொழில்நுட்பத்தின் விளக்கம் சரியாக விளங்க படுத்த தெரியாது. ஆனால் இந்த தொழில் நுட்பத்தை கொண்டுதான் இன்று பல விடயங்களை சுருக்கியிருக்கிறார்கள். உ: 90 களில் நாங்கள் பெரிய றங்கு பெட்டி அளவில் ரேடியோக்கருவிகள் வைத்திருந்தோம், நானோ தொழில்நுட்பத்தின் உதவியின் ஒரு வடிவமே இன்று சிறுவர்கள் வைத்து பாட்டு கேட்கும் கைவிரல் அளவையும் விட சிறியதான MP3 , MP4 கருவிகள். இதே போல் பல உதாரணங்கள் உள்ளது. Chip என்ற பொருளே நானோ என்ற தொழில்நுட்பத்தின் உற்பத்தி பொருளே. நானோ அளவுகோல் என்றும் உள்ளது சரியான அளவு விதிமுறைகள் எனக்கு தெரியாது.

  2 . Acquired ImunoDeficiency Syndroom என்பது ஆங்கில பொருள். இதை என்னென்று தமிழில் சொல்லுவது?????? HIV என்ற ஆரம்ப கட்ட பக்டீரியாக்களால் தாக்கப்பட்டு புட்டுக்குட்டு போற தறுவாயில் டாக்குத்தர்களால் கைவிரிக்கப்படும் (I ‘m sorry என்று கூடுதலாக நாகரிகமாக சொல்லுவினம்) நிலையை தாண்டுவது தான் AIDS.
  இதை பிரான்சு நாட்டவர்கள் வழமை போல் புரட்டி SIDA என்று கூறுவார்கள்.

  3 . உரம் மூலப்பொருட்களில் ஒன்றை தானே 2 வருடங்களுக்கு முன் எமது மக்களில் மேல் விதைத்தார்கள். இதுக்கு மேல எழுதினால் அரசியல் ஆகிவிடும். வேண்டாம்.
  வளர்ச்சி அடைந்த நாடுகளில் செயற்கை உரங்களை பாவிப்பதில் சுற்றாடல் மாசடைவதால் தடை விதிக்க பட்டுள்ளது. கேள்வியில் உலகம் முழுவதும் என்பது ‘வளர்ச்சி அடையாத நாடுகளாக’ வாசிக்க வேண்டும்.

  4 . வியப்பான செய்தி. இதற்கு நான் பதில் அளிப்பதானால் எனக்கு குறைந்தது 70 வயது இருக்க வேண்டும். அல்லது சுமார் 20 வருடங்கள் யாழில் ஊர் சுத்தி இருக்கவேண்டும். என்னை வளர்ததுகள் கேணிக்கு கூட நீந்த தனிய அனுப்பியது இல்லை…
  அருமையான கேள்வி.
  அமெரிக்க தூதுவர் (Buetenis) ஏதோ ஒன்றுக்கு கடைசியில் மானிப்பாயில் போனதாக எங்கோ வாசித்தேன். இதாகவும் இருக்கலாம். பெயர் தெரியாது.

  எனது 3 பதில்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். எனது ஊகிப்புகள் சரியோ என்பதற்காகவே என் முயற்சி. எனது பதில்களின் விளக்கம் திருப்தியற்றவை. ஒரே சமயத்தில் 4 பதில்களையும் கொண்டு வெல்பவர்க்கே வெற்றியென்றால் நல்லாக இருக்கும்,

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   Immuno = imuno
   Syndrome = syndroom (டச்சில் எழுதும் சொல்).

   • theepan:

    acquired = பெற்ற
    immuno deficiency – நிர்ப்பீடன குறைபாடு
    syndrome – கூட்டியம்
    பெற்ற நிர்ப்பீடன குறைபாட்டு கூட்டியம் என்று சொல்லலாம். இப்பிடி கஷ்டப்படுவதை விட பேசாமல் எயிட்ஸ் என்றே சொல்லலாம்.
    எயிட்ஸ் என்பது ஒரு தனி நோயல்ல. அடிக்கடி தன்னை மாற்றிக் கொள்ளும் HIV வைரசால் ஏற்படும் உடல் நோயெதிர்ப்புச் சக்தி குறைபாட்டு நோய்.

    இவ்வைரஸ் ஆனது எமது உடலின் காவலர்களான குருதி வெள்ளை அணுக்களின் (White blood cells ) CD 4 எனும் ஒரு வகைக் கலங்களை அழிக்கின்றது.
    இதனால், எம்முடலின் நோயெதிர்ப்புச் சக்தி குறைந்து, நிமோனியா ,வயிற்றுப் போக்கு, மூளைக் காய்ச்சல் போன்ற பல தொற்று நோய்கள் உருவாகி, இறப்பு வருகிறது.
    அதாவது, HIV வைரஸ் நேரடியாக இறப்பை உண்டு பண்ணுவதில்லை.
    AIDS என்பது, CD 4 எண்ணிக்கை 200 cells /micro litre ஐ விட குறைவாக உள்ள நிலை. இதன் போது தான், மேலே சொன்னது போன்று opportunistic infections உருவாகின்றது. (உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு CD 4 , 500 ஐ விட அதிகமாக இருக்க வேண்டும் ).
    CD 4 , 200 ஐ விட அதிகமாக உள்ள HIV தொற்று உள்ளவர்கள் HIV Positive என்று தான் அழைக்கப்படுவர்.
    அதாவது HIV தொற்று உள்ள அனைவரும் AIDS நோயாளிகளல்ல.
    latest treatment பற்றி ஆர்வமிருப்பின் அலசலாம்.

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

     எனக்கு paracetamol , asprine களை தவிர வேறு ஒன்றும் விளங்காது – நன்றி விளங்கங்களுக்கு.
     விருத்தஷேஷனமா latest treatment?

    • theepan:

     இதென்ன இது, யாருமே இல்லாத கடையில டி ஆத்திறன் போல.

     • தீபன் எங்கட டீ கடைக்கு வாரத்துக்கும் ஆக்கள் இருக்கினம் .அந்த நாளிலை வடக்கமபிராய் கனகன் கடை வடைக்கும் (வடை ஆத்தினது
      எங்கடை ஒரு குவாக்கை தான் )வெள்ளை அப்பாவின்றை சுண்டலுக்கும் ,
      பண்டத்தெருப்பிலை பொன்னையா கடை பிலேண்டிக்கும் கூட்டம் நிறைஞ்ச காலம் ஒண்டு இருந்ததது .அதே போல் எங்களுக்கும் ஒரு கூட்டம் குவுயும் அண்ணை. நாங்கள் இருக்கிறோம் பயப்பிடாதை அண்ணை

    • தீபன் என் வேலை பளுவை வெகுவாக குறைத்துவிட்டார் .அனைத்து
     விடயங்களையும் அற்புதமாக விளக்கிவிட்டார் .இருந்தும் சொல்ல மறந்த
     சில முக்கிய விடயங்களை சொல்ல வேண்டியது என் முக்கிய கடமை.
     உந்த போட்டியை நான் ஏற்படுத்தியதன் முக்கிய நோக்கம் உவன் சுதர்சன்
     அடிக்கடி முனுமுனுக்கிற ஒரு சொல்லு mkng awairness இந்த தாரகை மந்திரத்திலேயே நானும் வாழ முற்படுகிறேன் .aids ஐ பற்றிய விழுப்புணர்வு
     உலகளாவிய ரீதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இத்தறுவாயில்
     எனக்கும் உள்ள பங்களிப்பை இந்த போட்டியின் மூலம் நடை முறைய்
     படுத்த முடிந்ததை இட்டு மிக மகிழ்ச்சி .தீபன் சொல்ல வேண்டிய அனைத்தையும் மிக லாவகமாக சொல்லிவிட்டார் (நான் சொல்ல நினைத்ததுகள் ) விடுபட்ட ஒன்றை மட்டும் நான் சொல்லுகிறேன் .
     உந்த வைரசுகள் பல்வேறு வழியில் எம் உடலிலில் புகுந்துள்ளது
     என்று வைத்துக்கொள்வோம் .உந்த வைரசுகள் தங்கள் உடலை சுற்றி
     ஒரு கவசத்தை உண்டாக்கி (சொன்னால் நம்பமாட்டியள்) பத்து வருஷ
     காலத்துக்கு எந்தவித இயக்கமும் இன்றி உறங்கு நிலையில் இருக்கக்கூடிய
     பயங்கரமான ஆக்கள் .நீங்கள் இரத்த பரிசோதனை செய்தாலும்
     உங்களுக்கு HIV -ve . உந்த கவசத்துடன் உந்த வைரசுகள் பத்து வருசங்கள்
     ஒழுஞ்சு மறஞ்சு வாழக்கூடிய வல்லமை உள்ள ஆக்கள் .எனவே
     விழிப்புணர்வுடன்
     வாழ பழகுங்கள் .இன்னும் ஏராளம் எழுதலாம் ,உங்களுக்கு அலுப்பு தட்டிவிடும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்

  • சுதர்சன் ஒரு திருத்தம் நம்பர் 2 இல் hiv பக்டீரியா என்றிருப்பது வைரஸ் என்று மாட்டப்படவேண்டும் .

 • theepan:

  நல்ல தரமான அறிவு பூர்வமான கேள்விகள். எனக்கு விடை தெரிந்தாலும் இளையோருக்காக இது……

Leave a Reply for theepan

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்