உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இஸ்ரேல்- எகிப்து எல்லைப்பகுதியில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் இரண்டு போர் கப்பல்களை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 18-ம் தேதியன்று இஸ்ரேல்-எகிப்து எல்லைப்பகுதியான காஸா பகுதியில் நடந்த வான் தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பழிக்குபழியாக இஸ்ரேல் நிலைகள் மீது பாலஸ்தீனயர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 8 இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேல்-எகிப்து பகுதியில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், எகிப்தின் செங்கடல்பகுதியில் இஸ்ரேல் ராணுவம், இரு போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் உள்துறை அமைச்சர் மெட்டன்வில்னாய் கூறியதாவது:

இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த பாலஸ்தீனியர்களின் சில பயங்கரவாத அமைப்புகள், எகிப்து செங்கடல் பகுதி வழியாக ‌சினாய் பகுதியில் ஊடுருவ முயற்சி செய்கிறது. இதனை எகிப்தும் கண்டுகொள்வதில்லை.

எனினும் பதிலடி கொடுக்க இஸ்ரேலும் தயாராகிவிட்டது. இதன் முன்னோட்டமாக இரு போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எந்த நேரமும் தாக்குதல் நடந்த ராணுவ வீரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். இஸ்ரேலின் இந்த செயல் 1979-ம் ஆண்டு இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தினை மீறியதாகும் என எகிப்து கூறியுள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்