உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்>>முடிச்சு அவிழ்க்கப்பட்டுள்ளது <<

1)    தேடப்படும் நாடு?

2)    பெரும்பான்மை மக்களுடைய மதம்?

3)    பிரதம மந்திரியின் பெயர்?

 

அவசர தேவை கருதி உதவிபுரிந்த நெதர்லாந்து வாழ் செல்வா  குடும்பத்தாருக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

போட்டியின் விதிமுறைகள்  

1/ பதில்கள்  அளிக்க வேண்டிய காலக்கெடு எதிர்வரும் ஞாயிறு, 18ம் திகதி, பணிப்புல நேரம் 23:59 வரை. இதன்பின் சமர்ப்பிக்கப்படும் (சரியான) பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

 

2/ புனைப்பெயர்களில் பதில்களளிப்பதை தவிர்ப்பது வரவேற்கப்படும்.

 

3/ குறிப்பிட்ட தொகை (100€) கேட்கப்பட்ட பதில்களை  ஒரேசமயத்தில் கொண்டு  வெல்லும் முதல் வாசகரின் சார்பில் பணிப்புலம்  பாலர் பாடசாலைக்கு அவசர தேவை கருதிய தளபாடப்பொருள்கள்  கொள்வனவுக்காக செல்வா குடும்பத்தால்  முன்வந்து அன்பளிப்பு செய்யப்பட்ட இத்தொகையை நெதர்லாந்து பண்-முக ஒன்றியம் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே.

 

4/ விதண்டாவாத கேள்விகளுக்கு பதிலளிக்கப்படமாட்டாது. மேல் தரப்பட்ட      தகவலிற்கு புறம்பாக எதுவும் மீறி தரப்படமாட்டாது.24 Responses to “பொதறிவுப்போட்டி செப்டம்பர் 2011.”

 • n.muthuvijayan:

  இந்த பதிவு படிக்க நன்றாக இருக்கிறது.
  வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.
  என்.முத்துவிஜயன்@கமை.காம்.

 • 1 இந்த நாட்டின் பெயர் Mauritius
  2 இந்த நாட்டின் பிரதம மந்திரியின் பெயர் Sir Anerood Jugnauth
  3 பெரும்பான்மை மக்களுடைய மதம் இந்துமதம்

  • சுறா அண்ணை உந்த நாட்டுக்கு நான் போயிருக்கிறன் 2000 ஆம் ஆண்டில் .
   ஏழை மீனவர் ஒருவருக்கு .ஐஞ்சு ராத்தல் பாண் கொடுத்து ஒரு கும்பம் குப்பிளாய் மீனை (சுறா இல்லை ) பண்ட மாற்றம் செய்தோம் .எங்கடை புன்னாலை கடல் மீனை அடிக்காது .அங்குள்ள பல தமிழ் குடும்பங்களுடன்
   உரை ஆட கிடைத்தது .

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    தொழில்ரீதியாக நானும் இந்த நாட்டவர்கள் சிலரை சந்தித்தேன், பேசினேன், ஒரு வாரமாக சேர்ந்து வேலைசெய்தோம், சாப்பிட்டோம், குxxxதோம். அதில் இருந்துதான் எனக்கு இந்த நாட்டிலும் நாங்கள் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு inspiration பிறந்தது.
    எனக்கு வியக்கவைத்த விடயம் என்னவென்றால் அவர்கள் யாழ் தமிழ் (dialect) இல் பேசினார்கள். அவர்களின் குடும்ப பெயர்களும் கூடுதலாக முருகனின் பெயர்கள். என்னமோ இப்பவும் எனக்கு எங்கையோ உதைத்து கொண்டிருக்கிறது இந்த நாட்டு இந்துக்களுக்கும்/தமிழருக்கும் எமக்கும் ஏதோ உறவு இருக்கவேண்டும் என்று.
    அது சரி இந்த இணையத்தில வேற செய்திகளும் இருக்காக்கும் அதிலும் கொஞ்சம் எட்டிப்பார்க்கவும். உங்கள் கருத்துக்கள் அங்கும் தேவை. ஏதோ கருத்துக்களமாம், ஏழாம் நம்பர்.

    • சுதர்சன் அண்ணை நான் உன்றை எழுத்துக்கு அர்மையான ஒரு பதிலை
     எழுதினன் ஆனால் இருந்தா போல எல்லாம் மறைகிரதடா ‘எனக்கேடால்
     ஒண்டும் விளங்குது இல்லை என்ரை தொழில்நுட்ப கோளாறோ
     இல்லை உவன்கள் ஏதாவது என்னை குழப்புகிரனகளோ நானறியேன் ?

 • theepan:

  தமிழர்களின் பொற்காலம் சோழர் காலம். அச்சோழர் காலத்தின் மணிமகுடம் மாமன்னன் ராஜ ராஜ சோழன் மற்றும் அவரின் மகன் ராஜேந்திரன் ஆண்ட கி.பி.985 முதல் 1044 வரையான காலப் பகுதியாகும். இவர்கள் காலத்தில், சோழப் பேரரசு தமிழகம்,சேர(கேரளா),ஆந்திரம்,கன்னட தேசம்,கலிங்கம்,கீழைச் சாளுக்கியம்,வங்கம்,பர்மா,மலேசியா,தாய்லாந்து,கம்போடியா,சுமாத்திரா,ஜாவா,போர்னியோ,அந்தமான்,நிகோபார், லட்சத் தீவுகள்,மற்றும் இலங்கை அனைத்தையும் உள்ளடக்கியதாக வியாபித்திருந்தது.

  இத்தனை பெரிய வல்லரசாக இருந்தபோதும், ஜனநாயகப் பண்புகள் பிறவாமல் ஆட்சி நடத்தியது இவர்கள் பெருமைக்கு சான்று. உதாரணமாக, கிராமப் பஞ்சாயத்துகளில் குடவோலை முறையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப் பட்டனர். இன்றைய ஜனநாயத்தின் ஆரம்பமே இது தான். தமிழர்களாகிய நாம் இப்பெருமையை அறியாதிருக்கிறோம்.

  ராஜேந்திரன் தான், உலகிலேயே முதன் முதல், பெரும் கப்பற் படையோடு சென்று நாடுகளைக் கைப்பற்றியவன் . கீழ்த் திசையில் இவ்வளவு நாடுகளை கைப்பற்றியவன், மேற்குத் திசையை விட்டு வைப்பானா?. மேற்கு நோக்கி கப்பற் படையுடன் சென்ற ராஜேந்திரன், முதலில் கைப்பற்றியது, மாலை தீவுகளை. அதன் பின் மேலும் முன்னேறி சென்றவன், அருகருகாக இருந்த இரு தீவுகளை கைப்பற்றினான். இத்தீவுகள் சொக்க வைக்கும் அழகோடு, மக்களற்று, அடர் வனங்கள் நிரம்பியதாகக் காணப்பட்டன. தீவின் நடுப் பகுதிக்கு சென்ற ராஜேந்திரனுக்கு, அதிர்ச்சியும் ஆச்சரியமும் காத்திருந்தது. அது, கனன்று கொண்டிருந்த எரிமலை.

  அதனால் அங்கிருப்பதில் பயனில்லை, என்று முடிவெடுத்தவன், தாயகம் திரும்பினான். 600 வருடங்கள் கழித்து இதே தீவுகளுக்கு வந்த ஒல்லாந்தர் இங்கு முதல் குடியேற்றத்தை உண்டாக்கினர்.
  அவர்களைத் தொடர்ந்து பிரெஞ்சுக் காரர்களும், பிரிட்டிஷ் காரர்களும் இத்தீவுகளைக் கைப்பற்றினர். பிரிட்டிஷ் ஆட்சியின் போது கரும்பு பயிரிடுவதற்காக கூலி(அடிமை)தொழிலாளர்களாக தமிழர்கள் இங்கு குடியேற்றப் பட்டனர். இது தான் காலத்தின் கோலம், தமிழர்கள் முதன் முதலில் வீரத்துடன் காலடி வைத்த அதே ஊருக்கு 850 வருடம் கழித்து அடிமைகளாக கால் ஊன்றினர்.

  இப் பொதறிவுப் போட்டி குறிப்பிடும் நாடு தான் இந்நாடு.

  நன்றி.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நன்றி தீபன் அண்ணை. நல்ல சுவாரஸ்யமான பெருமைப்பட வேண்டிய விடயம்.

  • எனக்கு உந்த தீபன் எண்ட ஆள் ஆரெண்டு இன்னும் பிடிபடுகுதில்லை .சரித்திரங்களை விளாசுகிறான் .இருந்தாப்போல ஒரு டாக்குத்தன் மாதிரி நோய் நொடி ,மருந்து மாத்திரை களை பற்றி விசுக்கி எறிகிறான் .(நீ டாக்குத்தருக்கு படிச்சிருக்கலாம் -அவள் வினோதினி யாழ் .
   பல்கலை கழகத்தில் சமூக விஞ்ஞான பீடத்தில் பீடாதிபதியாய் இருக்கவேண்டியவள். உவன் சுதர்சன் law படிச்சு ஜி ஜி பொன்னன் மாதிரி வந்திருப்பான் .என்ன செய்ய காலம் உங்களை காவு கொண்டு போய் அந்நிய மண்ணில் அநியாயமாக வீசிப்போட்டுது .இருந்தாலும் உவர் தீபன் ஆரெண்டு கண்டு பிடியாமல் விடன். scotlandyard இலை என்ரை பிரண்டு ஒருத்தன் ஸ்மித் எண்டு இருக்கிறான் .அவனிட்டை ஏற்கனவே பாரம் குடுத்திருக்குது .அதோடை இஞ்சை லோகாலாய் ஒரு piraivate detective service இடமும் குடுத்திருக்குது .வலு கெதியில் பிடிச்சு போடுவன் .வணக்கம்

   • அப்ப நான் ஊரில இருந்திருந்தால் என்னமாதிரி வந்திருப்பன் என்று எனக்கும் ஒருக்கா சொல்லுங்கோவன்.

    • எடே சுறா நீ ஊரிலை இருந்தாய் எண்டால் நாங்கள் அந்த நாளில்லை பிள்ளை பெத்த பெண்டுகளுக்கு பால் சுரக்க வேணும் எண்டதுக்காக
     உங்கடை ஆக்கல்லிலை பால் சுறா எண்டு ஒரு ஆக்கள் இருக்கினம் .அவையளை சிப்பிலி சந்தை ,இல்லாட்டில் தெரு சந்தை (இப்ப பண்டதெருப்பு) போய் வாங்கியாந்து நல்லா தாளிச்சு ஒரு குழம்பு இல்லாட்டால் ஒரு வறை.எங்களுக்கும் சைட்டிலை கொஞ்சம் கிடைக்குமடா .பிறகு அந்த நாளில்லை ஓவலவைக்கு ஒரு உறட்டி சுட்டு குடுப்பினம் .முட்டை முளகு சீரகம் வேறை என்னென்னவோ எல்லாம் போட்டு சுட்டு குடுப்பலவை .எங்களுக்கும் ஒரு சின்ன துண்டு கிடைக்கும் .இப்ப அதெல்லாம் ஒண்டும் இல்லையடா .ஆசுவத்திரிக்கு போவாளவை. மிசிநிலை பெறுகிரமாதிரி பிள்ளையளை பெறுவலவை.பிறகு அடுத்த நாள் நோமல் வாழ்க்கை .நாங்கள் அந்த நாளில்லை .பாவட்டம் இலை,ஆமனக்கமிலை ,நொச்சிகுளை எண்டு இடையன் புலம் ,ஒழுங்கைகட்டு எண்டு அலைஞ்ச காலம் எல்லாம் மலை ஏறி போச்சுதடா சுறா . நாண்கள் பிறந்தது அந்த மண் வீட்டு குந்திலை .மருத்துவம் பார்த்தது மாரியன்றை தாய் .எல்லாம் போச்சுதடா சுறா .

 • எடே சுதர்சன் உனக்கு வேற வேலை இல்லையேடா ? போய் பாத்து ரூமை சுத்தம் பண்ணடா
  அப்ப உன்றை பெண்டில் நல்ல இஸ்பெசல் சாப்பாடு ஒண்டு செய்து உனக்கு அன்பு பரிசாக
  அளிப்பாள் .

 • theepan:

  என்ன இந்த டீக்கடயிலையும் ஆக்களை காணேல்லை. பிசினஸ்ஸை கூட்டோனுமெண்டால் நமீதா,நயன்தாராவோட பெரிய சைஸ் கவர்ச்சிப் படம் போடோணும் போல கிடக்கு.

  • theepan:

   ஊர்வழிய சலூனுகள்ள ஏன் உந்தப் படங்கள் வைக்கிறவை எண்டு யோசிச்சுப் பாத்தன்.தலைய ஆட்டாதை, தலைய ஆட்டாதை எண்டு அவையளும் எத்தினை முறை தான் சொல்லுறது. உந்தப் படங்களை பாத்தா தலையை மட்டுமில்லை ,கண் ,வாய் எல்லாத்தையும் ஆடாம வச்சிருப்பினம் தானே? பிறகு அவை லேசா தலைமயிரை வெட்டலாம்.

 • theepan:

  நேற்று பார்த்த போது சரியான விடைகள் இருந்த மாதிரி இருந்தது. நேரமில்லாததால எனக்குத் தெரிந்த சில விடயங்களைப் பகிர முடியாமல் போய் விட்டது. இண்டைக்குப் பார்த்தா ஒண்டையும் காணேல்லை. ஆர்வக் கோளாராலை போன முறை போட்டியைச் சுவாரசியமில்லாமை ஆக்கினமாதிரி இந்த முறையும் செய்ய விரும்பவில்லை .போட்டி முடியும் போது, இந்நாட்டுடன் சம்பந்தப்பட்ட, ஒரு வரலாற்று தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   எனது concept ஐ சரியாக விளங்கியுள்ளீர்கள். நன்றி. வெல்வது இங்கு முக்கியமில்லை. ஒரு சிறிய தகவலை தேடும்பொழுது பல சுவாரஸ்யமான விடயங்களை அறிந்துகொள்வோம். இதனை பலர் முயற்ச்சிக்கவேணும் என்பதுவே எனது நோக்கம்.
   போட்டி முடிவில் நீங்கள் கூறிய மேலதிக தகவல்களை அறிய ஆவல். தந்துதவவும்.

   • theepan:

    நன்றி சுதர்சன். உங்கள் கேள்வி மிகவும் தரமானது. நாமெல்லாம் அறிந்திருக்க வேண்டிய நாடு இது.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  அற்புதன் என்பவருக்கு ஒரு அறிவித்தல்.
  உங்கள் பதில்கள் தற்சமயம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது, ஏனையவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுப்பதற்காக.
  உங்கள் மின்னஞ்சல் தவறாக உள்ளது.
  18 ம் திகதி உங்கள் பதில்கள் அவை பதியப்பட்ட நேரங்களுடன் பிரசுரிக்கப்படும்.
  நன்றி.

  • இதற்கான விடை நோடிக்கப்பூதி யாராவது விடை எழுதும்வரை பதியிறன்.

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    உங்கள் ஆர்வமே ஆரோக்கியமான விடயம்.

 • அற்புதன்:

  1 இந்த நாட்டின் பெயர் Mauritius
  2 இந்த நாட்டின் பிரதம மந்திரியின் பெயர் Sir Anerood Jugnauth
  3 பெரும்பான்மை மக்களுடைய மதம் இந்துமதம்

 • அற்புதன்:

  நாட்டின் பெயர் Mauritius 1
  பெரும்பான்மை மக்களுடைய மதம் இந்துமதம் 2
  பிரதம மந்திரியின் பெயர் Sir Anerood Jugnauth 3

 • மாசி:

  எனக்கும் தெரியும் நி கலக்கு சித்தப்பு

 • theepan:

  எனக்கும் தெரியும் .நாங்கள் ஒரு சிலர் மட்டும் கேள்வி கேட்டு விடை சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

 • சபாஷ் .அருமையான போட்டி .எனக்கு விடை தெரியும் .இளசுகளுக்கு இடம்
  விடவேனுமேனும் என்பதால் பணிவுடன் விலகி நிக்கிறன்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்