தமிழில் எழுத
பிரிவுகள்


திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்குத் தாலி கட்டிய பின்னர் மணமகனையும் பெண்ணின் தந்தையையும் தாக்கி விட்டு மணப் பெண்ணைக் கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் மண்டபத்தில் கூடியிருந்த மக்களால் பிடிக்கப்பட்டார்.

சினிமாப் பாணியில் கடந்த 31 ஆம் திகதி சாவகச்சேரி பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

மண்டபத்தில் கூடியிருந்த மக்கள் இளைஞரை விசாரித்த போது மச்சாள் முறையான மணப்பெண்ணை சிறுவயது முதல் விரும்புவதாகவும் தான் விரும்புவது மணப்பெண்ணுக்குத் தெரியாது எனவும், திருமண நிகழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தி சினிமாப் பாணியில் அழைத்துச் செல்ல முயற்சித்த தாகவும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இளைஞரை மண்டபத்தில் உள்ளவர்கள் விசாரித்துக் கொண்டிருக்கையில் மணப்பெண் தாலிகட்டிய கணவருடன் காரில் ஏறிப் பறந்து விட்டார். திருமண ஏற்பாட்டின் பிரகாரம் கடந்த 31 ஆம் திகதி மாலை திருமணப் பதிவும் இடம்பெற்றது.

இளைஞர் திருமண மண்டபத்தில் குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை வெளிநாட்டில் உள்ள மாப்பிளையிடம் பெண்ணை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும்வேளையில் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் இரகசியமாகத் திருமணப்பதிவு இடம்பெற்றமை தெரியவந்ததுள்ளது.

அதனை அறிந்த மாப்பிள்ளை குடும்பத்தினர் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சாவகச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணமகனின் பெற்றோருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து விவாகப் பதிவாளரிடம் விசாரித்த போது திருமணப் பதிவு ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அத்துடன் விவாகப் பதிவாளருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பெண்ணின் பெற்றோரும் நிற்பதைக் கண்டு மணமகனின் பெற்றோர் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

One Response to “சாவகசேரியில் மணமேடையில் வைத்து மணப்பெண்ணை கடத்திச் செல்ல முயற்சி:”

  • முற்று முழுக்க இலங்கை கலைஞர்களை மட்டும் பாவித்து ஓர் மெகா சீரியல் ஒண்டு எடுப்பது என் நீண்ட நாள் கனவு .கனவு நனவாகும் காலம் நெருங்கிவிட்டது .கதைக்கான கரு பொருள் கிடைத்தாயிற்று .உங்களுக்கு நன்றி

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்