உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


செங்கல்பட்டில் உள்ள அகதி முகாமில் 13 இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 41 இலங்கை அகதிகள் செங்கல்பட்டில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் கடந்த திங்கட் கிழமை முதல் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்து தங்கள் மீதுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு தங்களை குடும்பத்துடன் வாழ ஏற்பாடுகள் செய்யும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகக் கூறி அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர்.

2வது நாளாக நேற்றையை தினமும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்ததாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்