தமிழில் எழுத
பிரிவுகள்


சகல வசதிகளுடன் மனதுக்கு நிம்மதி தரும் மாநகரங்கள் என்ற வரிசையில் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரம் முதலிடத்தில் இருக்கிறது.
உலக அளவில் பொருளாதாரம், தொழில், கம்பெனிகள் நிர்வாகம் உள்பட பல்வேறு துறைகளை அலசி ஆராய்ந்து ஆய்வு முடிவுகளை இங்கிலாந்தின் எகனாமிஸ்ட் குழுமத்தின் ஒரு பகுதியான “எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் வெளியிட்டு வருகிறது. வாழ்வதற்கு ஏற்ற நகரம் எது? என்பதுதான் இந்த அமைப்பு லேட்டஸ்டாக வெளியிட்டிருக்கும் பட்டியல்.

சமூக ஸ்திரத்தன்மை, சுகாதார வசதிகள், கலாசாரம், கல்வி, அடிப்படை வசதிகள் மட்டுமின்றி மக்கள் நெருக்கம், போக்குவரத்து, சுற்றுச்சூழல், இட வசதி, செலவு உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் உலகின் 140 முன்னணி நகரங்களை இது வரிசைப்படுத்தி உள்ளது.

இதில் அதிகபட்சமாக 97.5% மதிப்பெண்களுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரம். 2, 3-வது இடங்களை ஆஸ்திரியா தலைநகர் வியன்னா, கனடாவின் வான்கோவர் நகரங்கள் பிடித்துள்ளன.

அவுஸ்திரேலியாவின் சிட்னி 6-வது இடத்திலும், பெர்த் மற்றும் அடிலைடு நகரங்கள் 8-வது இடத்திலும் இருக்கின்றன. பாரீஸ்-16, டோக்கியோ-18, ஹாங்காங்-31, சான்பிரான்சிஸ்கோ-51, சிங்கப்பூர் மற்றும் லண்டன் 53, நியூயார்க்-56 என்று போகிறது பட்டியல்.

ஆசிய அளவில் இதில் முன்னணி இடத்தில் இருப்பது 72-வது இடத்தில் இருக்கும் சீன தலைநகர் பீஜிங் மற்றும் 79-ல் இருக்கும் ஷாங்காய். இந்தியாவின் பிசினஸ் தலைநகராக கருதப்படும் மும்பை 116-வது இடத்தில் இருக்கிறது.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா, லிபியா தலைநகர் திரிபோலி, வங்கதேச தலைநகர் தாகா, ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே ஆகியவை மும்பைக்கும் கீழே உள்ளன. வாழ்வதற்கு கொஞ்சம்கூட லாயக்கு இல்லாத இடங்களாம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்