உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நேற்று டெல்லியின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.2 ஆக பதிவாகியது. டெல்லி மட்டுமல்லாமல் அதன் துணை நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளுக்கும், தெருக்களுக்கும் வந்து நின்றனர்.

ஹரியானா மாநிலம் சோனீபட்டில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. டெல்லி தவிர காஜியாபாத், நோய்டா, கர்கான் ஆகிய நகரங்களிலும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். இரவு சரியாக 11.28 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பத்து விநாடிகளுக்கு இது நீடித்தது.

இதுகுறித்து மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் சைலேஷ் நாயக் கூறுகையில்,”நிலநடுக்கத்தின் அளவு 4.2 ரிக்டராக இருந்தது. சோனீபட்டை மையமாக கொண்டிருந்தது” என்றார்.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, பொருட்சேதம் ஏற்பட்டதா என்பது குறித்துத் தகவல் இல்லை. சண்டிகர், சோனீபட் பகுதியிலும் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். மிகக் குறைந்த அளவில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சோனீபட் மக்கள் கூறினர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்