உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பொலிவியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர்பிழைத்த நபர் ஒருவர் தான் தனது சிறுநீரைக் குடித்தும் , பூச்சிகளை உண்டுமே மூன்று நாட்கள் உயிர் வாழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

35 வயதான மைனர் விடல் என்ற அந் நபர் ஒரு விற்பனைப் பிரதிநிதி ஆவார். இவர் பொலிவியன் எயார்லைன் எய்ரோகொன் விமானத்தில் செண்டா குரூஸிலிருந்து டிரினிடார்ட் நோக்கிப் பயணித்துள்ளார்.

இதன்போது விமானத்தில் சுமார் 9 பேர் வரை பயணித்துள்ளனர்.

இவர்கள் பயணித்த விமானம் இரவு நேரத்தில் காடொன்றினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தில் பயணித்த மற்றைய அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

எனினும் மைனர் விடல் மட்டும் உயிர்பிழைத்துள்ளார்.

கடும் காயங்களுக்குள்ளாகியுள்ள இவர் இவரது சிறுநீரைக் குடித்துள்ளதுடன் பூச்சி இனங்களை உண்டு சுமார் 62 மணித்தியாலங்கள் இவர் காட்டுக்குள் இருந்துள்ளார்.

அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட அந்நாட்டு கடற்படையினரே இவரை மீட்டுள்ளனர்.

இவர் சாரணராக இருந்ததாகவும் அதன்போது தான் பெற்ற அனுபவங்களே தன்னை மூன்று நாட்கள் உயிர் வாழ உதவியதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்