Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இன்று நடைபெற்ற டென்மார்க் பாராளுமன்றத் தேர்தலில் சோசல் டெமக்கிரட்டி தலைமையிலான சிவப்பு அணி 89 ஆசனங்களைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றது. இதுவரை ஆட்சியில் இருந்த வென்ஸ்ர தலைமையிலான நீல அணி தோல்வியடைந்தது. இவர்களுடைய கூட்டணிக்கு 86 ஆசனங்கள் கிடைத்தன.

புதிய பிரதமராக கெல தொனிங் சிமித் பதவியேற்க உள்ளார். இவர் டென்மார்க்கின் முதலாவது பெண் பிரதமர் என்ற சிறப்பையும் பெறுகிறார். மேலும் இந்தத் தேர்தலில் சிவப்பு அணியில் போட்டியிட்ட நான்கு பிரதான கட்சிகளில் சிறு கட்சிகளாக இருந்த இரண்டு கட்சிகள் அமோக வெற்றியீட்டியுள்ளன. றடிகல வென்ஸ்ர 17 ஆசனங்களை பெற்றதோடு எஸ்.எப் கட்சியையும் முந்திச் சென்றுள்ளது. அதேபோல என்கில்ஸ்லிஸ்ற் கட்சியும் 12 ஆசனங்களை பெற்று முன்னணி வகித்துள்ளது. சோசல் டெமக்கிரட்டி, எஸ்.எப் இரண்டும் பின் தங்கினாலும் மற்றய இரண்டு கட்சிகளும் வெற்றி பறிபோய்விடாது காப்பாற்றியுள்ளன.

இந்தத் தேர்தலில் என்கில்ஸ்லிஸ்ற் சென்ற தேர்தலுடன் ஒப்பிட்டால் எட்டு ஆசனங்கள் அதிகமாகவும், அதுபோல றடிகல வென்ஸ்ர எட்டு ஆசனங்கள் அதிகமாகவும், லிபரல் அலையன்ச நான்கு ஆசனங்கள் அதிகமாகவும், வென்ஸ்ர ஓர் ஆசனம் அதிகமாகவும் பெற்றுள்ளன. பத்து ஆசனங்களை இழந்து படு தோல்வியடைந்தது கொன்ஸ்சவேட்டிவ், அடுத்து ஏழு ஆசனங்களை பறி கொடுத்தது எஸ்.எப், மூன்று ஆசனங்களை பியா கியாஸ்கோ அம்மையார் பறி கொடுத்துள்ளார். சோசல் டெமக்கிரட்டி ஓர் ஆசனத்தை பறி கொடுத்துள்ளது. கிறீத்தவ ஜனநாயகக் கட்சி ஓர் ஆசனத்தைக்கூட பெற முடியாமல் தோல்விகண்டுள்ளது.

றடிகல வென்ஸ்ரவை இணைத்து புதிய ஆட்சியை அமைக்கும் கெல தொனிங் சிமித் மிகுந்த சிரமத்துடனேயே தனது வெற்றிப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும். கூட்டு கட்சிகளில் ஒரு கட்சியை பகைத்தாலே ஆட்சி கவிழ்ந்துவிடும். எனவே கயிற்றில் நடப்பது போலவே நடந்து போக வேண்டியுள்ளது.

தேர்தல் வெற்றிக்குப் பின் உரையாற்றிய கெல தொனிங் சிமித் அனைவரையும் சேர்ந்தியங்க வரும்படி அழைப்பு விடுத்தார். தம்முடன் போட்டியிட்டு தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். மேலும் தனது கூட்டுக் கட்சிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார். நாளை முதல் தனது பணிகள் ஆரம்பமாகின்றன என்று புதிய சூளுரைப்பு செய்தார். புதிய பிரதமரை வாழ்த்திய பின்னர் ஆட்சி செய்யும் சாவியை தருகிறேன் நிரந்தரமாக அல்ல தற்காலிகமாக என்று தோல்வியடைந்த பிரதமர் லாஸ் லொக்க ராஸ்முசன் கூறினார்.

3 Responses to “டென்மார்க்கில் நடந்த தேர்தலில் சோசல்டெமக்கிரட்டி கூட்டணி வெற்றி.”

  • கமலகண்ணன்:

    அப்ப இனி டென்மார வாழ் நம்ம ஊர் ஆக்களுக்கு வேலைக்கு போக தேவையில்ல சொஸல் அள்ளி அள்ளி குடுப்பாங்க போல அம்மன் கோவில் தேர்முட்டிய டென்மார்க் வாழ் நம் ஊரவன் எல்லாம் சேர்ந்து தங்கத்தில செய்து வைக்க போறாங்கள்

  • தட்போது அனுப்பிச தகவல் எங்கே அர்ய்யத்தருவீர்களா

  • norweyooraan:

    இதட்கு காமன்ஸ் எழுதலாமா
    தயவு செய்து அறியத
    தரவும்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்