உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்அவுஸ்திரேலியாவுக்கு கிழக்கே பசிபிக் கடலில் உள்ள பிஜி நாட்டில் இன்று மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 7.3 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
இதனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படாவிட்டாலும், நிலநடுக்கத்தால் அந்த நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் சுவா உள்பட பிஜி தீவின் முக்கிய தீவுகள் அனைத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால் கட்டிடங்கள் மிக பயங்கரமாக குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பிஜியின் டோய் தீவுக்கும், நுகோலாபாவுக்கும் இடையே பூமிக்கு அடியில் 626 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்