உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் மட்டும் 19 பேரும், மேற்கு வங்கத்தில் 5 பேரும், பிகாரில் 2, நேபாளம் மற்றும் திபெத்தில் தலா 7 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சிக்கிமில் 6.8 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்களும், சாலைகளும் பெருமளவு சேதமடைந்துள்ளன.

சிக்கிமின் வட மாவட்டத்திலும், ராங்போ, டிக்சு, சிங்தாம் மற்றும் சங்தாங் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காங்டாக்கில் மின்சாரம் இன்று காலை சீரமைக்கப்பட்டது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் யாரும் நேற்று இரவு தங்கள் வீடுகளில் தங்காமல் பாதுகாப்பான மைதானங்களில் தங்கியிருந்தனர். நிலநடுக்கத்துக்குப் பிறகு இரவு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதால் காங்டாக்கில் பெரும் பீதி ஏற்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சக தகவலின்படி சிக்கமில் 10 கிலோமீட்டர் அளவில் 16 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் பல்வேறு முக்கிய சாலைகள் வெள்ளம் காரணமாக பலத்த சேதமடைந்துள்ளன. நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவுக்கிடையே ராணுவத்தின் 72 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 4 துருவ் ஹெலிகாப்டர்களும், 5 சீடாக் ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்