Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



டேனிஸ் பொருளாதார நிலை பெரும் உறுதியற்ற நிலையில் ஏறத்தாழ ஒற்றைக்காலில் தள்ளாடியபடி நிற்பதாக யூஸ்க்பாங்க் அறிவித்துள்ளது.

இன்றைய நிலையில் டேனிஸ் பொருளாதாரத்தின் எதிர் காலம் பெரும் பாதகமான போக்கையே காட்டுகிறது என்றும் யூஸ்க் பாங்க் தெரிவித்தது. கடந்த காலங்களில் வெளிநாட்டு ஏற்றுமதிகளில் கிடைத்த வருமானத்தால் சீராக சென்ற டேனிஸ் பொருளாதாரம் இப்போது உலக நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் முறிவடைந்துள்ளது.

தற்போதைய நிலையில் வெறும் உள்நாட்டு பொருளாதாரம் என்ற ஒற்றைக் காலிலேயே நிற்க வேண்டிய அவலம் டேனிஸ் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ளது என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது. டென்மார்க்கில் உள்ள ஏராளமான பொதுத்துறைச் சலுகைகள் பொருளாதாரத்தின் உதிரத்தை வேகமாக உவிந்து வருகின்றன. அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி குறைந்தபட்சம் 1.2 வீதம் அதிகரிக்க வேண்டும் ஆனால் இது வெறும் 0.1 முதல் 0.4 வீத வளர்ச்சியாகவே இருக்கப்போகிறது என்றும் அது கவலை தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரம் மேலும் பாதாளத்திற்கு போகப்போகிறது, இந்த நிலை டேனிஸ் ஏற்றுமதி வருமானத்தில் மேலும் பாதிப்பபை ஏற்படுத்தும், மாறாக அது உள்நாட்டில் வேலையின்மையை ஏற்படுத்தி பொருளாதார நெருக்கடியை மேல் உயர்த்தும். இப்படி பொருளாதாரத்தின் ஸ்திரமற்ற நிலை ஒன்றன் மேல் ஒன்றாக எதிர் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் யூஸ்க் வங்கி பொருளியல் ஆய்வாளர் நீல்ஸ் றொன்கொல்ற் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்