உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்இதோ அதோ என்று தள்ளிப் போடப்பட்டு வந்த ரஜினியின் ராணா படம் கைவிடப்படக்கூடும் என கோடம்பாக்கத்தில் பலமான வதந்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன.

ராணா படம் துவங்கிய தினத்தன்றுதான் ரஜினியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஒரே ஒரு நாள் ஷூட்டிங் நடந்ததோடு சரி. அதன் பிறகு தொடர்ந்து மருத்துவமனை, சிகிச்சை, ஓய்வு என்று போகின்றன ரஜினியின் நாட்கள்.

ஆனாலும், சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை முடிந்து வந்த ரஜினி, ராணாவை மீண்டும் தொடர ஆர்வம் காட்டி வந்தார். அந்தப் படம் குறித்து தொடர் ஆலோசனைகள் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினி இன்னும் 6 மாத காலத்துக்கு கண்டிப்பாக ஓய்வெடுத்தாக வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குநர் ரவிக்குமார் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “இந்தப் படத்தை இப்போது தொடர முடியாத நிலை உள்ளது. எனவே இதை தள்ளிப் போட்டுவிட்டு, முத்து மாதிரி ஒரு லைட்டான படத்தை எடுக்கலாமா என ரஜினி சார் ஆலோசித்து வருகிறார். இதுகுறித்து இயக்குநர் ரவிக்குமாரும் ரஜினியும் ஆலோசனை நடத்தியது உண்மைதான்,” என்றார்.

ஆனால் இதுபற்றி ரஜினியோ ரவிக்குமாரோ அல்லது தயாரிப்பாளரோ இதுவரை எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்