Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மன்னார் மூர் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஆறு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

மன்னார் பள்ளிமுனை 49 வீட்டுத்திட்டம் கிராமத்தைச் சேர்ந்த செபஸ்ரியான் அபிசேக் என்ற சிறுவனே மேற்படி உயிரிழந்தவராவார். குறித்த சிறுவன் பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் தரம்-01 இல் கல்வி கற்று வந்துள்ளார்.

தந்தை பணிபுரியும் அலுவலகத்தில் இருந்து குறித்த சிறுவன் கடைக்குச் சென்று கொண்டிருந்த போது வீதியில் வந்த பிக்கப் ரக வாகனம் சிறுவன் மீது மோதியுள்ளது.

இதனால் குறித்த சிறுவனின் தலை மற்றும் உடல் பகுதிகள் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்தார்.

குறித்த வாகனத்தை செலுத்தி வந்தவர் மன்னார் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலத்தை மன்னார் மாவட்ட நீதவான் பார்வையிட்டதுடன் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் கையளிக்களிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்