உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வவுனியா – கண்டி ஏ-9 வீதியின் நவகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 12.50 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து அநுராதபுரத்திற்கு பயணித்த வான் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் வானில் பயணம் செய்தவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வவுனியா – இரட்டைப்பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெரும்பான்மை இனத்தவராவார். வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்