Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



டென்மார்க்கில் கெல தொனிங் சிமித் தலைமையிலான புதிய ஆட்சி இன்று திங்கள் பகல் பத்துமணிக்கு பதவியேற்கிறது. கடந்த பத்துவருட காலமாக இருந்த வென்ஸ்ர கட்சி தலைமையிலான அரசு டேனிஸ் மக்கள் கட்சியுடன் இணைந்து முன்னெடுத்த வெளிநாட்டவருக்கு எதிரான பல மோசமான சட்டங்கள் இல்லாமல் போகின்றன. இதில் முக்கியமானது முன்னாள் டேனிஸ் பிரதமரும், இப்போதைய நேட்டோ செயலருமான ஆனஸ்போ ராஸ்முசனால் 2001 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இணைவாக்க அமைச்சு இல்லாமல் செய்யப்படுகிறது. இந்த அமைச்சகமே வெளிநாட்டவருக்கு எதிராக பல்வேறு இறுக்கங்களை கொண்டு வந்தது. இப்போது இந்த அமைச்சகத்திற்கு மூடுவிழா நடாத்தப்படுவதை வெளிநாட்டவருக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்த டேனிஸ் மக்கள் கட்சி எதிர்த்துள்ளது. தாம் உருவாக்கிய வெளிநாட்டவருக்கு எதிரான சட்டங்கள் யாவும் செயற்பட முடியாத அவலம் வரப்போவதாக அலறியுள்ளது. அதேவேளை இணைவாக்க அமைச்சின் பணிகளை சோசல் அமைச்சும், நீதியமைச்சும் முன்னெடுக்கவுள்ளன.

அதேவேளை திருமணம் முடிக்கும் வெளிநாட்டவர் ( படிப்பு, வேலை அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் ) புள்ளி முறையின் மூலமே தமது வாழ்க்கைத் துணையை எடுக்க முடியும் என்ற இரும்பு லாடன் சட்டமும் இல்லாமல் போகிறது. கடந்த பத்தாண்டுகளாக டேனிஸ் மக்கள் கட்சியின் செயலால் உண்டான பாரிச வாதமும், பக்கவாதமும் சமுதாயத்தின் மலர்ச்சியை சீரழித்து வந்தன. இப்போது அந்த பக்கவாதங்கள் கணிசமான அளவு அகற்றப்படுகின்றன. புதிய பிரதமர் கெல தொனிங் சிமித் வெளிநாட்டவர் அகதிகள் விவகாரத்தை உள்ளடக்கிய தனது திட்டத்தை சுமார் 100 பக்கங்களில் சமர்ப்பித்துள்ளார். மேலும் முன்னர் இல்லாதொழிக்கப்பட்ட தாய்மொழிக் கல்வியும் சிறிய அளவில் வருவதற்கான வாய்ப்புக்கள் தெரிகின்றன. ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்பது தெரிந்ததே.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்