உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்திருமலையில் கடற்படைச் சிப்பாய் பலி; பதின்மூவர் படுகாயம்
திருமலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இராணுவ வாகன விபத்து ஒன்றில் சிறிலங்கா கடற்படைச்சிப்பாய் ஒருவர் பலியானதுடன் மேலும் 13 கடற் படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

திருகோணமலை திஸ்ஸ கடற்படைத் தளத்தில் நடைபெற்ற பயிற்சிகளில் கலந்து கொண்ட படையினரை ஏற்றிச் சென்று கொண்டிருந்த குறித்த இராணுவ வாகனம் திருமலை பூநகர் பகுதியில் உள்ள மரம் ஒன்றுடன் மோதியதனாலேயே இவ் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விபத்தில் 13 படையினர் படுகாயமடைந்த நிலையில் சேருநுவர மற்றும் கந்தளாய் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்