Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் கல்முனை மாநகரசபை வேட்பாளர் ஒருவர் வீட்டின் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை பாண்டிருப்பு செல்லப்பர் வீதியலில் உள்ள ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் கல்முனை மாநகரசபை வேட்பாளர் கந்தையா விநாயகமூர்த்தியின் வீட்டின் மீது நேற்றையதினம் இரவு 9.30 மணியளவில் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் வீட்டின் யன்னல், கதவுகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவத்தின் போது வோட்பாளர் வீட்டினுள் இருந்துள்ளதுடன் அவருக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கல்முனை பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்