உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பணவீக்கத்தை கட்டுப்படுத்த பாரத ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் நிதி கொள்கைகளுக்கு சர்வதேச செலாவணி நிதியம் அங்கீகாரம் அளித்துள்ளது.
வளரும் நாடுகளில் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் போது பணவீக்கம் போன்றவை தவிர்க்க முடியாதவை. அவற்றை கட்டுப்படுத்தும் போது நெருக்கடிகள் உண்டாவதும் சகஜமானதுதான்.

பணவீக்கம் குறிப்பிட்ட இலக்கை தாண்டும் போது பணவீக்க எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கும். சீனா, இந்தியா, கொரியா போன்ற நாடுகளில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நிதிக் கொள்கைகள் சரியானதுதான் என சர்வதேச செலாவணி நிதியதித்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருள்களின் விலை உயர்வு காரணமாகவே பணவீக்கம் ஏற்படுகிறது. ஆனால் சில நாடுகளில் பொருள்களுக்கு காணப்படும் தொடர் தேவைக் காரணமாகவும் பணவீக்கம் அதிகரிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருள்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்தியா, இந்தோனேசியா, கொரியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் முதல் காலாண்டில் பல நாடுகளில் பணவீக்க எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்த நிலை ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி போன்றவற்றால் ஆசிய நாடுகளில் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் நடப்பு ஆண்டுக்கான ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.25 சதவீதமாக இருக்கும் என்று அது மதிப்பிட்டுள்ளது.

பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், பண புழக்கத்தை குறைக்கவும் பாரத ரிசர்வ் வங்கி கடன்கள் மீதான வட்டி விகிதங்களை கடந்த ஆண்டு மார்ச் முதல் இதுவரை 12 முறை உயர்த்தியுள்ளது.

இருந்தபோதும் இது இரட்டை இலக்கத்தை தொடும் நிலையில் உள்ளது. வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதால் நாட்டில் தொழில் துறை பாதிக்கப்பட்டது. உற்பத்தியும் சரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 25ம் திகதி இரண்டாவது காலாண்டுக்கான நிதிக்கொள்கை பாரத ரிசர்வ் வங்கி அறிவிக்கவுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்