உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்திருமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டுக் கொடியுடனான கப்பலின் மாலுமி ஒருவரின் மர்ம மரணம் தொடர்பில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என அதிர்வு இணையம் அறிகிறது. இந்தக் கப்பலின் மாலுமியான யுடின் பன் என்பவர் நேற்றுக் காலை மர்மமான முறையில் இறந்து காணப்பட்டார். இவரின் மரணத்தில் மர்மம் நிலவுவதாக எழுந்த சந்தேகத்தையடுத்து அவரது சடலம் தற்போது கொழும்புக்குக் கொண்டு வரபப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் விசாரணை முடியும் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் இந்தேனேஷிய துறைமுகத்திலிருந்து புறப்பட்டு இலங்கை வந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்