Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மணற்காடு பிரதேசத்தில் மணல் ஏற்று வதற்காக சென்ற லொறி வல்லைப் பாலத்திற்கு அண்மையாக குடைசாய்ந்ததில் சாரதி நசியுன்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்றுக்காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையாரான செல்லத்துரை ஜெகன் (வயது 35) என்ற லொறி சாரதியே உயிரிழந்தவராவார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றின் லொறி மணற்காடு பிரதேசத்தில் மணல் ஏற்று வதற்காக சென்று கொண்டிருந்தபோது வல்லை வெளியில் புனரமைக்கப்படும் பாலத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்ட தற்காலிக பாதையில் பயணித்தவேளை குடைசாய்ந்து கடலுக்குள் பாய்ந்தது.

லொறி குடைசாய்ந்த போது தப்பிப்பதற்காக லொறிச் சாரதி லொறியிலிருந்து பாய்ந்துள்ளார். எனினும் சாரதியின் மீது லொறி குடைசாய்ந்தது. இதனால் சாரதி நசியுண்டு அவ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் மரண விசாரணைகளின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நெல்லியடிப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்