உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்விசேட ஹெலிகொப்டரில் இன்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜக்கிய அமெரிக்க பாராளுமன்றக் குழுவினர் யாழ்.அரச அதிபரைச் சந்தித்து யாழ்ப்பாணத்தின் சமகால நிலைப்பாடுகள் பற்றி கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையில் யுத்ததிற்குப் பின்னரான யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் நிலைகளை நேரில் அறிவதற்காக ஜக்கிய அமெரிக்க பாராளுமன்றக் குழுவினர் இன்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இவர்கள் யாழ்.கோட்டை, யாழில் உல்லாச மையங்கள், கோட்டை, பிரசித்தி பெற்ற ஆலயங்கள் தரிசித்ததுடன் யாழ்.மாவட்ட செயலகத்திற்கும் வருகை தந்து யாழ்பாணத்தின் நிலமைகளை அரச அதிபரிடம் கேட்டறிந்து கொண்டனர்.

ஜக்கிய அமெரிக்க பாராளுமன்றக் குழுவினரான கெட் சலர், வன் சான்சலர், ஜக் குயின்ரன்ஸ் ஆகியோர் உட்பட மெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களும் ஜக்கிய அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய ஆகியோரும் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்