உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியின் 25ம் கட்டை பகுதி பாக்கட் சந்தியில் கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த கொள்கலன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீட்டின்மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை 04.15 அளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வீட்டில் இருந்த பெண் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கொள்கலனின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

31 வயதுடைய சுனில் திலகரட்ன என்ற சாரதியும் ஹட்டன் டிக்கோயா பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ராமசாமி சசிதரன் என்ற நடத்துனருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்