உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்அகதிகள் தங்கியுள்ள வட அவுஸ்திரேலிய முகாமொன்றில் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு சபை தெரிவித்துள்ளது.

Scherger அகதிகள் முகாமில் நேற்று இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் அதில் ஒரு காவலாளியும் இரு அகதிகளும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலில் இலங்கை அகதி ஒருவருக்கு பற்கள் உடைந்து மூக்கு நரம்பில் முறிவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய அகதிகள் செயற்பாட்டாளர் இயன் ரின்டோல் தெரிவித்துள்ளார்.

மோதலை அடுத்து சுமார் 700 பேர்வரை தங்கியுள்ள முகாமில் பதற்றம் நிலவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முகாமில் பல இலங்கை அகதிகள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பதிலுக்காக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனால் அவர்கள் மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்