உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தலைமன்னார் ஊருமலை பிரதேசத்தில் 1350 கிரேம் 440 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருளுடன் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் குறித்தப் பெண் வீட்டிலிருந்து முச்சக்கர வண்டியொன்றில் சிலர் திரும்பிச் சென்றதாக பொலிஸாருக்கு சந்தேகத்திற்கிடமான தகவல் ஒன்று கிடைத்ததை அடுத்து பேசாலை பொலிஸ் சோதனைச் சாவடி பகுதியில் முச்சக்கர வண்டி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்து 57 கிரேம் 540 மில்லிகிரேம் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்