உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாயினர்.மெக்சிக்கோவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் ஏற்கனவே வெள்ளத்தில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இந்நிலையில் தெற்கு மெக்சிக்கோ மலைப் பகுதிகளில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மலையின் 200 மீட்டர் உயரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறாங்கற்களும் மண்ணும் பயங்கர வேகத்தில் நிலத்தில் வந்து விழுந்தன.

இதில் மலையடிவாரத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இத்தகவலை கவர்னர் உலிசெஸ் ரூயிஸ் நேற்று தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்