உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கூந்தலைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடியதும் தலையை மசாஜ் செய்யக் கூடியதுமான நவீன ரோபோ ஒன்றை ஜப்பானின் பிரபல ‘பெனசொனிக்’ நிறுவன விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இரண்டு கைகளிலும் தலா 8 விரல்கள் வீதம் 16 ரோபோடிக் விரல்கள் இவற்றில் பொருத்தப்பட்டுள்ளன.

மசாஜ் செய்வதற்காக 3 மோட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் 2 கைகளும் முதலில் மனித தலையினை முப்பரிமாணமாக ஸ்கேன்செய்யும்.

பின்னர் தலையினது உருவத்தை அளந்துகொள்வதுடன் ஒவ்வொரு பகுதிக்கும் வழங்க வேண்டிய அமுக்கம் மற்றும் முறைகள் என்பனவற்றை நிர்ணயித்துக்கொள்ளும்.

இங்கு பொருத்தப்பட்டுள்ள மோட்டார்கள் அசைவு மற்றும் அமுக்கத்தை தன்னிச்சையாகக் கட்டுப்படுத்தும். விருப்பமான மசாஜ் முறையை இதில் தெரிவு செய்யவும் முடியும்.

மேற்படி ரோபோக்களானது வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களின் தலையையும் கூந்தலையும் சாம்போவால் சுத்தப்படுத்தும். இதன் மூலம் வைத்தியசாலைகளில் இத்தகைய ஊழியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியுமெனத் தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்