Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ராஜ் ராஜரத்தினத்துடன் இணைந்து மாபெரும் நிதி மோசடியில் ஈடுபட்ட இந்தியரான ரஜத் குப்தா அமெரிக்காவில் எப்.பீ.ஐ அதிகாரிகளிடம் சரணடைந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் நிதி விவரங்களை மூலம் 75 பில்லியன் டொலர்கள் மோசடி செய்ததாக ராஜ் ராஜரத்தினம் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜரத்தினத்துக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜரத்தினத்துக்கு இந்த மோசடியில் உதவி செய்த இந்தியரான ரஜத் குப்தா மீதும் அமெரிக்காவின் எப்.பீ.ஐ பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.

Goldman Sachs நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான ரஜத் குப்தா, பல முக்கிய நிறுவனங்களின் நிதி விவரங்களை ராஜரத்தினத்துக்குத் வழங்கியுள்ளார்.

62 வயதான ரஜத் குப்தா அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்பட்ட இந்தியர் ஆவார். உலகின் முன்னணி நிறுவனங்களில் மிக உயர்ந்த பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந் நிலையில் இப்போது இவர் மீது 6 நிதி மோசடி வழக்குகளைத் தொடர்ந்துள்ளது எப்.பீ.ஐ இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 105 வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்