உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்நெதர்லாந்திலிருந்து இலங்கை நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு விமானம் திடீரென ஒரு பறவையால் இந்திய கோவா மாநில விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது.

விமானத்தின் இயந்திரங்களில் அகப்பட்ட பறவையால் விமானத்தை குறிப்பிட்ட நேரத்தில் இலங்கையில் தரையிறக்க முடியாமல் விமானிகள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர்.

கோவாவில் தரையிறக்கப்பட்ட விமானத்தின் இயந்திரங்கள் பின்னர் சீர்செய்யப்பட்டு இலங்கைக்கான பயணம் தொடரப்பட்டிது.

போயிங் 767 என்ற இந்த விமானத்தில் 263 பயணிகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது

3 Responses to “நெதர்லாந்திலிருந்து இலங்கை நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் திடீரென கோவாவில் தரையிரக்கப்பட்டது:”

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  Amsterdam இலிருந்து கொழும்பு செல்லும் விமானம் நேரே கொழும்பு செல்லாது அது திடீரென Goa வில் இறக்காது போகும்வழியில் Goa வில் இறக்குவது வழமை. இது டச்சுக்காரரின் வழமையான சிக்கனத்தன்மைகளில் ஒன்று.
  Goa விமானநிலையத்தில் விமானத்தை (destination ஆக) தரித்து வைத்திருக்க விமானநிறுவனத்திற்கு அதிக செலவாகும் என்று கருதியே Goa வில் touch பண்ணி கொழும்புக்கு தொடர்ந்து சென்று அங்கு மலிய சுத்தம் செய்துவிட்டு தொடர்ந்து Amsterdam இற்கு திருப்பி பறக்கும். அதாவது விமானம் 23 மணித்தியாலத்துக்குள் பறக்க தொடங்கிய Amsterdam இற்கே திரும்பி வந்து ஒரே இடத்தில் தரிப்பிடும்.

  பறவை விமானத்தில் அகப்பட்டிருக்காமல் இருந்திருந்தாலும் இந்த விமானம் Goa வில் இறக்கியே கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்டிருக்கும்.

  ArkeFly to launch Goa and Colombo service from Oct 2010

  ArkeFly from 05OCT10 offers Winter seasonal service to Goa and Colombo. Boeing 767-300ER operates Amsterdam – Goa – Colombo – Amsterdam routing once a week.

  Schedule below:

  OR465 AMS1620 – 0610+1GOI0650+1 – 0930+1CMB 763 2
  OR466 GOI0650 – 0930CMB1040 – 1740AMS 763 3

  டச்சுக்காரர் செலவு சிக்கனம் பிடிப்பதில் விண்ணர்கள் என்பதால்தான் சர்வதேச நிறுவனங்கள் நெதர்லாந்தில் தமது கிளைகளை நிறுவ விரும்புகிறது என்பதும் பெரும் காரணங்களில் ஒன்று. (இன்னொன்று multilingual / பன்மொழி)

  இவர்களின் சிக்கனத்தன்மை நெதர்லாந்தில் வாழும் தமிழர்களுக்கும் தொற்றியிருப்பதை அவதானிக்கலாம். சிக்கனம் என்பதை நப்பித்தனம் என்று பிழையாக விளங்கிக்கொள்ள வேண்டாம்!

  • theepan:

   சுதர்சன் ,நீங்கள் சொன்னது சரி. ஏனென்றால் பயணிகள் விமானம், சாதாரணமாகப் பறக்கும் உயரத்தில் பறவைகள் பறக்க முடியாது. ஆகவே பறவை விமானத்துக்குள் அகப்பட வாய்ப்பு இல்லை. ஆகவே அது தரையிறக்கத்தின் போது தான் அகப் பட்டிருக்க வேண்டும். இதைப் பற்றிய மேலதிக விவரம் தெரிந்தவர்கள் இருந்தால் தந்துதவவும். எம்மூரவர் ஒருவர் இத்துறையில் கற்று விட்டு வேறு துறையில் பணி புரிந்து கொண்டு இருக்கிறார் .அவரிடம் இது பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் இங்கு பிரசுரிக்கிறேன்.

   • சுதர்சன்:

    23 = 25 மணித்தியாலங்களுக்குள். நான் கணக்கில வீக்கு.

    நீங்கள் சொல்லும் விடயம் உண்மை. இவ்வளவுக்கு சுலபமாக யோசிக்காமல் ஆக தூரமாக டச்சுக்காரர், சிக்கனம் என்றெல்லாம் ஏதோவெல்லாம் யோசித்துவிட்டேன்.

    விமானங்கள் ஒரு/இரண்டு மணி நேரங்கள் இடைவெளியோடு தொடர்ந்து பறக்கின்றது ஒரு வியப்பான விடயமே. மேலட்டைவணைக்கமைய Amsterdam லிருந்து 10 மணிநேர பயணத்தின்பின் Goa வில் 40 நிமிட இடைவேளையும், பின்னர் கொழும்பில் 70 நிமிட இடைவேளையும் தொடர்ந்து 23 மணிநேரங்கள் பறக்கும் இயந்திரத்துக்கு போதுமா?
    கார்களுக்கே நீண்ட தூர பயணத்துக்கு பல தடவைகள் இடைவெளி எடுக்கும்படி இங்கு பலநாடுகளில் வழிகளில் அரசாங்கத்தால் அறிவுரைகள் கூறப்பட்டிருக்கும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்