உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக தமது வாழ்வில் கஷ்டத்தை அனுபவித்த இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி களுவாஞ்சிகுடியில் இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட சமூக நலன்புரி அமைப்பு அதன் பிரித்தானியாக் கிளையின் உதவியுடன் கணினி பயிற்சி கல்லூரி ஒன்றை புதுக்குடியிருப்பில் அமைத்து வருகின்றது.

இந்த கணனி பயிற்சி கல்லூரி அமைக்கப்பட்டு வரும் வளாகத்தினுள் லண்டன் அகிலன் பவுண்டேசன் கணனி விரிவுரை மண்டபம் ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது.

சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.திருநாவுக்கரசு தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஞானமயானந்தஜி, அகிலன் பவுன்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவருமான சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2012 ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படவுள்ள இந்த இலவச கணனி கல்லூரி மூலம் வருடாந்தம் 1000 இளைஞர் யுவதிகள் நன்மையடையவுள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்