உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பிரபல குணசித்திர நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மன். இவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். “ஆறில் இருந்து அறுபது வரை” படத்தில் ரஜினி தம்பியாக நடித்தார். அதில் ரஜினி உழைத்து நரசிம்மனை படிக்க வைத்து வேலை வாங்கி கொடுப்பதுடன் வசதியான இடத்தில் திருமணம் செய்தும் கொடுப்பார். அதன் பிறகு ரஜினியை நரசிம்மன் உதாசீனம் செய்வார். இதனால் ரஜினி விரக்தியாவது போல் காட்சி இருக்கும்.

கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து எல்.ஐ.சி. நரசிம்மன் நடித்த காமெடி காட்சிகளும் பேசப்பட்டன. வித்வான் கவுண்டமணியிடம் கசாப்பு கடைக்காரரான எல்.ஐ.சி. நரசிம்மன் பாட்டு கற்று கொள்ள வருவார் “நின்னுக்கோரி வரணும்” என்ற பாடலை வேறு மெட்டில் பாட கவுண்டமணி சொல்லி கொடுப்பார்.

இதில் நரசிம்மன் ஆடுவெட்டும் கத்தியை வைத்துக்கொண்டு கறியை வெட்டிக்கொண்டே பாடி கவுண்டமணியை பயமுறுத்த அவர் ஓடி விடுவார். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம். எல்.ஐ.சி. நரசிம்மன் கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டார். நேற்று உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.

எல்.ஐ.சி. நரசிம்மனுக்கு சுரேஷ் என்ற மகனும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். சின்மயா நகர் நெற்குன்றம் ரோட்டில் உள்ள வீட்டில் நரசிம்மன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்