உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யூரோ மண்டலம் மற்றும் கிரீஸ் கடன் நெருக்கடி குறித்து முக்கியமான தீர்வுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின் தற்போதைய நிதியை அதிகரிப்பதற்காக சீனாவின் உதவியை நாடியுள்ளது.
யூரோ மண்டல கடன் நெருக்கடி குறித்து கடந்த 26ம் திகதி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் 27 நாடுகளின் தலைவர்களின் கூட்டம் நடந்தது.

இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்வருமாறு:

1. கிரீசின் கடன் பத்திரங்களை வாங்கிய ஐரோப்பாவின் தனியார் வங்கிகள் தங்கள் கடனில் 50 சதவீதத்தை ரத்து செய்து விட வேண்டும்.

2. ஐரோப்பிய வங்கிகள் இந்த கடன் நெருக்கடி பரவலால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், அவற்றின் முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

3. ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின்(இ.எப்.எஸ்.எப்) தற்போதைய நிதியான 440 பில்லியன் யூரோ என்பது ஒரு டிரில்லியன் யூரோவாக அதிகரிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் இ.எப்.எஸ்.எப்.பின் நிதியை அதிகரிப்பதற்கு சீனாவின் உதவியை அந்த அமைப்பு நாடியுள்ளது. அமைப்பின் தலைவர் க்ளாஸ் ரெக்லிங் இதுகுறித்து நேற்று சீனத் தலைவர்களுடன் பேசினார்.

குறைந்தபட்சம் 70 பில்லியன் யூரோ தொகையையாவது சீனா இ.எப்.எஸ்.எப்.பில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தான் கொடுக்கும் தொகைக்கு உறுதியான உத்தரவாதங்களை சீனா கேட்கிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்