உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வான்கூவர் சர்வதேச விமானநிலையத்தின் ஓடுதளத்தில் ஒரு விமானம் மோதி தீ பிடித்து எறிந்ததில் அதில் பயணம் செய்த ஒன்பது பேர் காயமடைந்தனர்.
காயம் அடைந்தோரில் ஐந்து பேர் வான்கூவரில் உள்ள பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மற்ற நால்வரும் ரிச்மாண்டில் உள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்பது பேரை ஏற்றிச் செல்லும் பீச்கிராஃப்ட் ஏர் 100 என்ற சிறிய ரக விமானம் கெலோனா என்ற ஊருக்குப் பறந்தது. அங்கிருந்து வான்கூவர் திரும்பிவந்த போது ஓடுதளத்தில் மோதி மாலை 4 மணியளவில் தீப்பிடித்தது.

தீயணைப்புப் படையினரும் மருத்துவ உதவியாளரும் உடனே அவ்விடத்திற்கு விரைந்தனர். விமானத்தின் வால்பகுதி அதன் உடல்பகுதியில் இருந்து திரும்பி நின்றது.

விபத்துக்குள்ளான இந்த விமானம் நார்தன் தண்டர்பெடு ஏர் நிறுவனத்தைச் சேர்ந்தது. இந்நிறுவனம் 1971இல் தோன்றியது. Thunderbird மற்றும் Northern Mountain Airlines ஆகியன இணைந்து உருவாக்கிய நிறுவனம் Northern Thunderbird ஆகும். இந்த நிறுவனத்திற்கு 11 விமானங்களும் 70 பணியாளரும் உள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்