Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து றுகுணு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் றுகுணு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. ஆர்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை றுகுணு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு அரசு பதில் கூற வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவன் இ.கவிராஜன் ஆகியோர் மீது இனந்தெரியாத நபர்கள் அண்மையில் தாக்குதலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்