உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்யாழ் சுன்னாகம் பகுதியில் இன்று காலை வீதியால் நடந்துகொண்டிருந்த மூதாட்டி மிது வேகமாக வந்த உந்துருளி மோதியதில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
யாழ். சுன்னாகம் மாவெளிப் பகுதியைச் சேர்ந்த 80 அகவையுடைய கிருஸ்ணபிள்ளை சரஸ்வதி என்ற மூதாட்டியே உயிரிழந்தவராவார்.

மேற்படி விபத்துச் சம்பவத்தின் காயமடைந்த மூதாட்டிமுதலில் தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்