உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை ஆயுத முனையில் அச்சுறுத்தி பல இலட்சம் ரூபா பெறு மதியான நகைகள் கொள்ளை யிடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் மட்டுவில் தெற்கில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. கணவன் வெளியில் சென்ற வேளை வீட்டினுள் நுளைந்த இனந்த

யாழ்ப்பாணம்,செப்,30
வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை ஆயுத முனையில் அச்சுறுத்தி பல இலட்சம் ரூபா பெறு மதியான நகைகள் கொள்ளை யிடப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் மட்டுவில் தெற்கில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கணவன் வெளியில் சென்ற வேளை வீட்டினுள் நுளைந்த இனந்தெரியாத இருவர் ஆயுத முனையில் தனிமையில் இருந்த பெண்னை அச்சுறுத்தி நகை களை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
நீளக் காட்சட்டை அணிந்தி ருந்த அவர்கள் மேட்டார் சைக்கிளில் வந்தனர் என்றும் மேலும் துப்பாக்கி யைக் காட்டிப் பயமுறுத்தியே நகைகளைக் கொள்ளையடித்த னர். என்றும் தெரிவிக்கப்பட்டது.
தாங்கள் படையினர் என்றும் வீட்டைச் சோதனையிட வேண்டும் என அவர்கள் அந்தப் பெண்ணை அச்சுறுத்தினர் என்றும் கூறப்பட் டது.
தாலிக்கொடி மற்றும் ஒருலட் சத்துக்கும் மேற்பட்ட பணமும் கொள்ளையிடப்பட்டதாக சாவகச் சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக சாவகச் சேரிப் பொலிஸார் மேலதிக விசா ரனைகளை மேற்கொண்டு வரு கின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்