உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


ஜப்பான் நாட்டவரின் ஏ.ரி.எம். அட்டையினை களவாடி அதன் மூலம் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பணத்தினை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

வவுனியா கௌசிக் குளம் பகுதியில் அமைந்துள்ள சேவா லங்கா நிறுவனத்தின் தொழினுட்ப ஆலோசகராக கடமையாற்றிவரும் ஜப்பான் நாட்டவரின் ஏ.ரி.எம். அட்டையினைக் களவாடியே குறித்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஜப்பான் நாட்டவரின் மொழிப்பெயர்ப்பாளர் எனவும் அவர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கும் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்